Moon Agreement பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

Moon Agreement?
Moon Agreement?

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மூன் அக்ரீமெண்ட் என்ற ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.  

எதிர்காலத்தில் நிலவில் எந்த நாடும் எவ்விதமான பிரச்சனைகளையும் செய்து விடக்கூடாது என்ற நோக்கில், சில குறிப்பிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தயாரித்த ஒப்பந்தம் தான் நிலவு ஒப்பந்தம். எதிர்காலத்தில் நிலவில் எதுபோன்ற மோதல்களும் நடைபெறாமல் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகும். மேலும் பூமிக்கு அருகில் இருக்கும் செயற்கைக்கோளான சந்திரனை ஆய்வுக்காக மட்டுமே மற்ற நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்துடன், எந்த நாடும் நிலவில் தங்களின் ராணுவ தளத்தை அமைக்கவோ அல்லது ஆயுதங்களை பரிசோதிக்கவோ பயன்படுத்தக்கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடக்கத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டின. ஆனால் காலம் செல்லச் செல்ல தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருந்ததால், பல நாடுகள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டியதால், அந்நாடுகளுக்கு என தனித் தனி அறிவியல் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனால் இந்த நிலவு ஒப்பந்தத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. 

பல நாடுகள் நிலவில் கிடைக்கும் வளங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. அதனால் நிலவில் எத்தகைய பிரச்சனையும் செய்யக்கூடாது, அதன் மேற்பரப்பை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்ற விதிமுறையை சில நாடுகள் மாற்ற நினைக்கிறார்கள். இது அந்த ஒப்பந்தத்திற்கே எதிரானதாகும். 

நிலவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால் நிலவில் அதிகமாக ஆராய்ச்சி செய்யும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற முக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க அதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மற்ற நாடுகளுக்குக் கூற இந்தியாவுக்கு அதிகாரம் உள்ளது. 

நாளுக்கு நாள் பல ஒப்பந்தங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், காலப்போக்கில் இந்த நிலவு ஒப்பந்தம் நீர்த்துப் போகாமல் இருக்க, இந்தியா இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒரு வேளை இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகினால், ஒப்பந்தத்தையே ஒன்றுமில்லாமல் போகச் செய்வதற்கு பல நாடுகள் தயாராக இருக்கின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com