வேளாண் சந்தைக்கு வலு சேர்க்கும் இ-நாம் செயலி!

வேளாண் சந்தைக்கு வலு சேர்க்கும் இ-நாம் செயலி!

விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் கொண்ட வேளாண் சந்தையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்னணு முறையில் இ-நாம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்வது மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை மற்றும் விற்பனையாளர்களுக்கான தேவையான பொருள் ஆகியவை தடையின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இ-நாம் செயலி குறித்து விரிவாக பார்ப்போம்.

தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. விவசாயத் துறையிலும் தொழில்நுட்ப புரட்சி பல்வேறு வகையான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இ-நாம் என்ற செயலியை அரசு அறிமுகம் செய்து விவசாயிகளினுடைய வர்த்தக சந்தையை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிகிறது.

இ-நாம் செயலி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை பல்வேறு பகுதியில் உள்ள விற்பனையாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யலாம். மேலும் பாதுகாப்பான பணி பரிவர்த்தனையையும் உறுதி செய்ய முடியும்.

இதற்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை அரசின் நேரடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துச் சென்று அவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரி முன்னிலையில் விளைபொருள் குறித்தான தகவல்களை கணினியில் பதிவு செய்து, லாட்டை உருவாக்க வேண்டும். பிறகு விலைப் பொருளினுடைய தரம் பரிசோதிக்கப்பட்டு, அதுவும் கணினியில் பதிவு செய்யப்படும். பிறகு மின்னணு முறையில் ஏலம் நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய விற்பனையாளர்கள் நேரடியாக பங்கேற்று ஏலம் கேட்பர். ஏலம் முடிந்த பிறகு எடை சரிபார்க்கப்பட்டு அவை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும். மேலும் அதற்கான உரிய தொகை வங்கிக் கணக்கு மூலமாக விவசாயிக்கு செலுத்த இ-நாம் செய்து பயன்படுகிறது.

இ-நாம் செயலின் மூலம் பல்வேறு இடத்தில் இருக்க கூடிய வியாபாரிகளும் விற்பனையாளர்களும் ஒன்றிணைந்து வர்த்தகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த இணைய செயலியில் இடைத்தரர்களோ, கமிஷனோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகாரிகள் முன்னிலையில் நடப்பதால் விற்பனையாளரோ, விவசாயியோ பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இ-நாம் செயலியில் பண்ணை வாயில் வணிகம் என்ற முறையும் உள்ளது. இந்த முறையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் விளைப் பொருள்களை விளைவிக்கும் இடத்திலேயே ஆய்வு செய்வர். இதனால் விவசாயிகளுக்கு ஆகும் போக்குவரத்து செலவு குறைகிறது.

இவ்வாறு விவசாயிகளையும் விற்பனையாளர்களையும் ஒன்றிணைக்கும் வேளாண் விற்பனை சந்தையாக திகழும் இ-நாம் செயலியை சிறுகுறு வேளாண் வணிக கூட்டமைப்பு மற்றும் வேளாண் மற்றும் உழவர் அமைச்சகம் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com