இந்தியாவில் அறிமுகமாகவுள்ள eRupee. 

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள eRupee. 

ந்தியாவில் eRupee எனப்படும் டிஜிட்டல் கரன்சி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த பதிவில் அது சார்ந்த முழு தகவல்களைப் பார்க்கலாம். 

eRupee என்பது டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் INR என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய ரூபாயை டோக்கனைஸ் செய்யப்பட்ட டிஜிட்டல் நாணயமாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் காகிதப் பணம் போலவே டிஜிட்டல் வடிவில் இருக்கும் பணம்தான் இந்த eRupee. இது கிரிப்டோகரன்சி போலல்லாமல், ஒரே மதிப்பைக் கொண்டதாகும். அதாவது ஒரு ரூபாய்க்கு சமமான eRupee-ன் மதிப்பு எப்போதும் ஒரு ரூபாய் தான். கிரிப்டோகரன்சி போல அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்காது. 

இது 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 போன்ற பண மதிப்புகளில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் விரைவில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையில், இந்த டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்தலாம் என சொல்லப் படுகிறது. கடந்த வாரம் நடந்த ஜி20 மாநாட்டில், ஆர்பிஐ பிரதிநிதிகள், வருகிற ஜூலை மாத இறுதியில் யுபிஐ பயன்படுத்தி eRupee பணம் செலுத்துவது கொண்டு வரப்படலாம் எனக் கூறியிருந்தனர். இதனால் இது சார்ந்த அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான சில அறிவிப்புகளின் படி, பேங்க் ஆப் பரோடா, பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்றவை eRupee சேவையை ஆதரிக்கின்றன. இவை கிரிப்டோகரன்சிபோல ஒருபோதும் செயல்படாது. இந்திய நாட்டின் மத்திய வங்கிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான சோதனை, கடந்த டிசம்பர் 1, 2022 இல் பெங்களூரு, மும்பை, புதுடெல்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. 

இதன்படி eRupee-யை விரைவில் இந்தியாவில் அனைவருமே தங்களின் இ-வாலட்டில் சேமித்து வைத்து சாதாரணமாகப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com