சைபர் குற்றம் குறித்து புகார் அளிக்கும் வழிமுறை!

cyber crime
cyber crime

சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வழிமுறை.

வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் தருகிறதோ, அந்த அளவிற்கு ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் நிரம்பி இருக்கின்றன. குறிப்பாக தற்போது சைபர் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டன. இதனாலேயே தமிழ்நாடு அரசிம் சரி, இந்திய அரசும் சரி சைபர் குற்றங்களை விசாரிக்க தனி பிரிவை ஏற்படுத்தி குற்றங்களை தடுப்பதற்கும், குற்றச் செயல்களின் ஈடுபட்டவர்கள் தண்டிப்பதற்கும், குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்ற பிறகு அதை எப்படி அணுக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

இந்தியாவில் நடைபெறும் க சைபர் குற்றங்களில் பெருமளவில் பொருளாதார குற்றங்களாகவே இருக்கின்றன. மேலும் ஹாக் செய்வது, பாலியல் தொந்தரவு, மிரட்டல், பண மோசடி, தகவல் திருட்டு ஆகிய சைபர் குற்றங்களும் நடைபெற்று வருகின்றன.

பொருளாதார சைபர் குற்றம் நடைபெற்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு வங்கு பதிவிற்த்தனையை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்றால் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பு வழி வகையை ஏற்படுத்தி உள்ளது.

சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் உடனடியாக ஹெல்ப்லைன் நண்பர்களை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் அல்லது ஆன்லைன் வழியாக புகார்களை பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்கலாம்.

ஆன்லைன் குற்றத்திற்கான ஹெல்ப்லைன் நம்பரா 1930 செயல்படுகிறது. தேசிய காவல் துறை உதவி எண் 112, தேசிய பெண்கள் உதவி எண் 181, மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வழியாக புகார் அளிக்க முயற்சிப்பவர்கள் https: cybercrime.gov.in இணைய முகவரியில் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சம்பவம் / புகார் குறித்த முழுமையான விவரம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு புகார் பதிவாகும். மேலும் ஆன்லைன் வழியாக புகார் அளிப்பவர்கள் புகாரின் நிலை குறித்து அதே இணையதள முகவரி மூலமாக கண்காணித்துக் கொள்ளலாம். அருகில் உள்ள காவல் நிலையத்தை அனுகுபவர்கள் எழுத்து வடிவில் உரிய விவரங்களோடு புகாரை அளிக்கும் பட்சத்தில் உடனடியாக புகாரை பெற்றுக் கொண்டதற்கான மனு ரசீது காவல்துறை சார்பில் வழங்கப்படும். அவற்றைப் பெற்றுக் கொண்டால் புகார் பதிவானதாக கருதப்படும். அதன் பிறகு எஃப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com