வருமான வரியை இனி யுபிஐ பரிவர்த்தனை மூலமாக செலுத்தலாம்!

வருமான வரியை இனி யுபிஐ பரிவர்த்தனை மூலமாக செலுத்தலாம்!
Editor 1

போன் பேயில் வருமான வரி  செலுத்தும் ஆப்சன் அறிமுகம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி அனைத்து காரியங்களும் சுலபமாக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில் வருமான வரியை செலுத்துவதற்கான நடைமுறையை எளிமையைபடுத்தி யுபிஐ பரிவர்த்தனை மூலமாக ஆன்லைனில் தனிநபரோ அல்லது நிறுவனமோ வரி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு யுபிஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்தி போன் பே செயலி மூலம் வருமான வரியை எளிதாக செலுத்த முடியும். வரக்கூடிய ஜூலை 31ம் தேதி வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி நாளாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமையாக்கும் பொருட்டு போன் பே செயலியில் "இன்கம் டேக்ஸ் பேமென்ட்" என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனி நபர் அல்லது நிறுவனங்கள் முன்கூட்டியே வருமான வரியை செலுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்Editor 1

மேலும் இதற்காக இன்கம் டேக்ஸ் வெப்சைட்டுக்கு சென்று லாகின் செய்து வரி செலுத்துவதற்கான பழைய நடைமுறை தற்போது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்காக பே-மேட் நிறுவனத்துடன் போன் பே இணைந்துள்ளது.குறிப்பாக போன் பே செயலி  மூலம் வருமான வரித் தொகையை மட்டும் செலுத்த முடியும், மாறாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகவும் போன் பே செயலியில் வருமான வரியை செலுத்த முடியும். இதற்காக போன் பேயில் உள்ள டெக்ஸ் பேமெண்ட் பயன்படுத்தி கிரெடிட் கார்டு விபரம், வரியின் விவரம், பணம் செலுத்தும் நிதியாண்டு, வரி தொகை போன்ற விவரங்களை பதிவு செய்து பணம்  பணம் செலுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com