பென்னு சிறுகோளில் உயிரினங்கள் உள்ளனவா?

Asteroid Bennu
Asteroid Bennu

பென்னு என்ற சிறுகோளில் இருந்து நாசாவின் ஒரைசிஸ் விண்கலம் மண் மாதிரிகளை சேகரித்து சிறு கேப்சூலில் அடைத்து பூமிக்கு அனுப்பியது. அந்த கேப்சூலை கைப்பற்றிய நாசா, அந்த மாதிரிகளை வகைப்படுத்தி பல கட்டங்களில் ஆய்வு செய்ய முடிவெடுத்தது. 

அந்த மாதிரிகளின் முதற்கட்ட ஆய்வில் பென்னு சிறுகோளில் நீர் மற்றும் கார்பன் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகக் தெரியவந்துள்ளது. இதனால் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த சிறுகோளில் நமது பூமியில் இருப்பது போலவே உயிர் வாழத் தேவையான அனைத்தும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது குறித்த அறிவிப்பை கடந்த புதன்கிழமை ஜான்சன் விண்வெளி மையத்திலிருந்து நாசா வெளியிட்டது. 

"இதுவரை OSIRIS-REx அனுப்பிய மாதிரி தான் இதுவரை விஞ்ஞானிகளுக்கு கிடைத்த கார்பன் நிறைந்த மிகப்பெரிய சிறுகோள் மாதிரியாகும். இதைப் பயன்படுத்தி நமது சொந்த கிரகத்தின் தோற்றத்தை விஞ்ஞானிகள் ஆராயலாம். இதை பயன்படுத்தி நாம் செய்யும் அனைத்து ஆய்வுகளும் இந்த பூமி எங்கிருந்து வந்தது என்பதற்கான கேள்விக்கான பதிலாக அமையும். இதுபோன்ற ஆய்வுப் பணிகளால் பூமியை அச்சுறுத்தும் சில்கோள்கள் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்தும். அதேபோல பூமிக்கு அப்பால் உள்ள விஷயங்கள் பற்றிய கண்ணோட்டத்தையும் நமக்கு விளக்கும். 

தற்போது கிடைத்த இந்த மாதிரியான மேலும் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட உள்ளது. இதுவரை நாம் கண்டறியாத பல அறிவியல் சார்ந்த விஷயங்கள் நமக்குத் தெரியும்" என நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் கூறியுள்ளார். 

OSIRIS-REx விண்கலத்தின் பணி என்னவென்றால், பெண்ணு சிறுகோலிலிருந்து 60 கிராம் அளவிலான மாதிரிகளை ஆய்வுக்காக பூமிக்கு அனுப்புவதாகும். இந்த மாதிரி விஞ்ஞானிகளின் கையில் கிடைத்ததுமே அதை மீண்டும் பயன்படுத்தும் படி கவனமாக பிரித்துள்ளனர். நாசாவின் கூற்றுப்படி தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பொருட்கள் விண்கலம் அனுப்பிய குப்பியில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com