iSIM Vs eSIM: இதன் வித்தியாசம் தெரியுமா?

iSIM Vs eSIM
iSIM Vs eSIM

செல்போன் வெளிவந்த தொடக்க காலங்களில் அதற்கு பெரிய அளவில் இருக்கும் சிம்கார்டை பயன்படுத்தி வந்தோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டு, சிம் கார்டின் அளவு குறைந்து கொண்டே சென்றது. தற்போது இந்த சிம் கார்டின் அடுத்த கட்டம்தான் iSIM, eSIM போன்றவை. இவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

eSIM என்பது ஒரு செல்போன் தயாரிக்கப்படும் போதே அதில் பொருத்தப்பட்டிருக்கும் சிம்கார்டாகும். அதாவது செல்போனுக்கு வெளியே இருந்து நாம் எதுவும் சிம்கார்டு போடத் தேவையில்லை. இதனால் செல்போனுக்கு தனியாக சிம் ஸ்லாட் தேவையில்லை என்பதால், அதன் டிசைனில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சாதனத்தில் eSIMக்கு எந்த நெட்வொர்க் எனேபில் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு ரெக்வஸ்ட் கொடுத்து எளிதாக அதைப் பயன்படுத்தலாம். 

iSIM என்றால் அதுவும் eSIM போலவேதான். ஆனால் iSIM, ஒரு சாதனத்தில் பயன்படுத்தப்படும் சிப்செட்டில் நேரடியாகப் பொருத்தப்பட்டிருக்கும். இதற்காக தனி இடம் எதுவும் தேவையில்லை. இது தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நானோ சிம்மை விட 100 மடங்கு வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்போதைக்கு இந்த வசதி Snapdragon 8 Gen 2 ஜிப்செட் கொண்ட சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது. 

ஒரு சாதனத்தில் நிலையாக இருக்கும் சிம்கார்டு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தாலும், iSIM, eSIM போன்றவை தற்போது சந்தையில் பிரபலமாக நுழைந்துள்ளது. இப்போது பலர் eசிம் பயன்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் எல்லா சாதனங்களிலும் iசிம் பயன்பாடு இருக்கும். உண்மையிலேயே ஒரு போனில் பிசிகல் சிம்கள் அகற்றப்பட்டால், அதன் டிசைனில் பல மாற்றங்கள் ஏற்படலாம். இனி வரும் காலங்களில் போன்கள் கச்சிதமாக மெல்லிய வடிவில் உருவாக்கப்படும். இதுதவிர அதன் ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். 

ஸ்மார்ட் ஃபோன்களில் சிம் ஸ்லாட் நீக்கப்படுவதால், தூசி மற்றும் தண்ணீர் உள்ளே புகுந்து ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து சாதனம் பாதுகாக்கப்படலாம். இது தவிர வெளிநாடு பயணம் செய்யும்போது, அங்கே சென்று வேறு சிம் கார்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிதாக அந்த நாட்டுக்குச் சென்று அங்குள்ள வேறு நெட்வொர்க்களுடன் eSIM, iSIM ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com