வாட்ஸ் அப்பில் புதிய AI அம்சம்!

New AI feature in WhatsApp
New AI feature in WhatsApp

உலகிலேயே மிகப் பிரபலமான வாட்ஸ்அப் மெசேஜ் தளம் தன் பயனர்களுக்கு பல அம்சங்களை அவ்வப்போது புதிதாக வழங்கி வருகிறது. அதேவேளையில் அந்த செயலில் பல மேம்படுத்தல்களும் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் பயன்பாட்டில் மற்றொரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலமாக பயனர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தங்கள் விருப்பம் போல பிடித்த ஸ்டிக்கர்களை உருவாக்கி பிறருக்கு சேட் செய்யும்போது அவற்றைப் பயன்படுத்தலாம். 

சமீபத்திய வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி AI மூலமாக உருவாக்கிய ஸ்டிக்கர்களை அவர்கள் சேமித்து தங்களின் தொடர்புகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் உள்ள ஸ்டிக்கர் பகுதிக்கு சென்று இந்த அம்சத்தை அனைவருமே பயன்படுத்தலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த முதலில் வாட்ஸ் அப் சாட்டிங்கைத் திறந்து அதில் உள்ள ஸ்டிக்கர் ஐகானைத் தொட வேண்டும். 

பின்னர் அதில் காட்டப்படும் உருவாக்கு என்பதை தொட்டதும், திரையில் காட்டும் Continue என்பதைத் தேர்வு செய்து, நீங்கள் எப்படிப்பட்ட ஸ்டிக்கரை உருவாக்க விரும்புகிறீர்களோ அதன் விளக்கத்தை எழுத வேண்டும். உதாரணத்திற்கு அழகிய புறா மற்றும் திருமணநாள் கேக் போன்ற விளக்கத்தை எழுதினால், அது தொடர்பான ஸ்டிக்கர்கள் திரையில் காட்டப்படும். 

இவற்றை நீங்கள் பயன்படுத்துவதை தவிர உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களையும் செய்யலாம். உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கரை தேர்வு செய்ததும் அதை கிளிக் செய்து சமீபத்திய பயன்பாட்டு ஸ்டிக்கர் ஆப்ஷனில் அதை தோன்றச் செய்யலாம். 

இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். ஒருவேளை இந்த அம்சம் உங்களுக்கு இன்னும் காட்டப்படவில்லை என்றால் சில வாரங்கள் காத்திருங்கள் விரைவில் உங்களுக்கு அந்த அம்சம் கிடைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com