த்ரெட்ஸ் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்!

Threads
Threads

த்ரெட்ஸ் கணக்கை டெலிட் செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அவர் எடுத்த நடவடிக்கைகள் ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் உடைய வீழ்ச்சிக்கு காரணமாக மாறியது. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் பலர் மாற்று சமூக ஊடகங்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதை பயன்படுத்த விரும்பிய மெட்டா நிறுவனத்தினுடைய இயக்குனர் மார்க் சக்கர்பெர்க், த்ரெட்ஸ் எனும் செயலியை புதிதாக அறிமுகப்படுத்தினார். இச்செயலி ட்விட்டர் (எக்ஸ்) செயலியில் உள்ள அனைத்து அம்சங்களையும் கொண்டு இருந்தது. இச் செயலி அறிமுகமான உடனே உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கணக்கை தொடங்கி இணைந்து கொண்டனர். ஆனாலும் த்ரெட்ஸ் செயலி ட்விட்டருக்கு இணையான ஒன்றாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. மேலும் த்ரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராமோடு இணைக்கப்பட்டு இருப்பதால் த்ரெட்ஸை டிஆக்டிவேட் செய்தால் இன்ஸ்டாகிராம் கணக்கும் டிஆக்டிவேட் ஆகும் சிக்கல் இருந்தது. இதனால் த்ரெட்ஸ் பயனாளர்கள் பலரும் மீண்டும் ட்விட்டருக்கு செல்வது அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் த்ரெட்ஸ் செயலி பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் சமூக ஊடக பயன்பாடு குறைந்து வருவதால் அதன் கணக்கை டெலிட் செய்ய புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் கணக்கு டெலிட் ஆகாமல் த்ரெட்ஸ் கணக்கை டெலிட் செய்ய முடியும் அல்லது டிஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து வகை போன்களிலும் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com