இனி வாட்ஸ்அப்பில் அன்லிமிடெட் பேக்கப் கிடையாது!

WhatsApp
WhatsApp

வாட்ஸ் அப்பில் பயன்பாட்டில் உள்ள அன்லிமிடெட் பேக்கப் அம்சத்தை நீக்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓரிடத்தில் இருந்து உலகின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு நொடியில் தகவல்களை பரிமாற தற்போதைய நவீன யுகத்தில் பல்வேறு செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் வாட்ஸ் அப் உலகம் முழுவதும் மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய தொலைதொடர்பு சாதனமாக உருவாகியுள்ளது. நொடிப்பொழுதில் தகவல்களை பரிமாறுவதோடு மட்டுமல்லாமல் வீடியோக்கள், ஆடியோக்கள், ஸ்டேட்டஸ்கள் என்று பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக வாட்ஸ் அப் மாறி இருக்கிறது. சொந்தப் பயன்பாடு மற்றும் இன்றி குழு பயன்பாடு, வர்த்தக ரீதியான நிறுவன பயன்பாட்டிலும் வாட்ஸ் அப் முக்கிய ஒன்றாக விளங்குகிறது. மேலும் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பை கையகப்படுத்திய பிறகு பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்ட அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் முதல் முறையாக வாட்ஸ் அப் அப்டேட்டில் கூடுதல் அம்சத்திற்கு பதிலாக குறைக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது‌. இவ்வாறு 2024 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப்பில் அன்லிமிடெட் பேக்கப் செய்யும் வசதி முழுமையாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக 15ஜிபி டேட்டாக்களை மட்டும் பேக்கப் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ் அப்பின் சேமிப்புத் திறன் மிக வேகமாக நிரம்பி வருவதாலும், சேகரிக்கப்படும் அளவுக்கு அதிகமான டேட்டா பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அன்லிமிடெட் பேக்கப் இனி கிடையாது என்ற தெரிவிக்கப்பட்டிருப்பது வர்த்தக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் பயனாளர்களுக்கு பின்னடைவாக மாறியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com