பாதுகாப்பாக இருக்க ஆப்ஸ் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்யுங்கள்!

apps and software
apps and software

எப்போது தொழில்நுட்பம் என்ற ஒன்று வளர்ச்சி பெறத் துவங்கியதோ, அன்று முதலே அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் உருவாகத் துவங்கிவிட்டது. குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் வழியாக பலவிதமான மோசடிகள் நடந்து வருகிறது. 

அதன்படி சமீபத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் கணினி வாயிலாக நம்முடைய தகவல்கள் திருடப்படும் பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பெரும்பாலானவர்கள் தங்கள் சாதனங்களில் பல முக்கியமான கோப்புகளை வைத்துள்ளனர். புகைப்படங்கள், பேங்க் விவரங்கள், பாஸ்வேர்ட் என பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்துமே நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களில் கட்டாயம் இருக்கும். 

இந்த விவரங்களை சாதனத்தில் இருக்கும் தனிப்பட்ட செயலி மூலமாகவே ஸ்கேமர்கள் திருடுவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் நமது சாதனத்தில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்சினையைப் பயன்படுத்தி நமது அனுமதி இல்லாமலேயே நம் தனிப்பட்ட விவரங்களைத் திருடி அதன்மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்கிறார்கள். இந்த பிரச்சனை குறித்து கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 

Libwebb library என்ற ஒரு கருவியை எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே பயன்படுத்துகிறது. இந்தக் கருவியில்தான் தற்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயலிகள், மென்பொருள்கள் என அனைத்துமே அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்திய எல்லா நிறுவனங்களும், தங்கள் செயலிகளையும் மென்பொருட்களையும் அப்டேட் செய்யச் சொல்கிறார்கள். 

எனவே உடனடியாக நீங்கள் பயன்படுத்தும் எல்லா செயலிகளையும், மென்பொருட்களையும் அப்டேட் செய்துவிடுங்கள். அப்படி செய்தால் மட்டுமே அவற்றில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இதுமட்டுமின்றி மாதம் ஒருமுறை நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கு ஏதாவது புதிய அப்டேட் வந்துள்ளதா என சரிபார்த்து உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. ஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு அப்டேட் வழங்குகிறது என்றால், அதில் ஏதோ ஒரு பிரச்சனையை நிவர்த்தி செய்கிறார்கள் என அர்த்தம். 

எனவே அனைவரும் தங்கள் சாதனங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பை உங்களுக்கு வழங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com