ஏ.சி.யிலிருந்து வடியும் நீரை என்ன செய்யலாம்?

What to do with water leaking from AC?
What to do with water leaking from AC?

சிக்கும், ஏர்கூலருக்கும் போட்டி வைத்தால் எப்போதுமே ஏசி தான் முதலிடத்தைப் பெறும். ஏனென்றால் ஏசிலிருந்து வரும் குளிர்ந்த காற்று மட்டுமல்ல, கடுமையான வெப்பத்திலும், அதிக ஈரப்பதமான கால நிலையிலும் ஏசி தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஏசி இயங்கும்போது அதிலுள்ள கூலன்ட் வெளிப்புற காற்றுடன் வினைபுரிந்து நீராக மாறுவதால் அதன் வெளிப்புறத்திலிருந்து தொடர்ச்சியாக நீர் சொட்டிக் கொண்டே இருக்கும் என்பது வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருக்கும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவ்வாறு கசியும் நீரை அப்படியே விட்டு விடுகிறார்கள். ஆனால் அதனுடைய பயன் தெரிந்தால் அந்த நீரை நீங்கள் அப்படியே விட மாட்டீர்கள். 

ஏசியிலிருந்து வெளியேறும் நீரை எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஏசிலிருந்து வெளியேறும் நீரை பல்வேறு விதமான வீட்டு உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். குறிப்பாக அந்த நீரை தாராளமாக செடிகளுக்கு ஊற்றலாம். அந்த நீரில் ஒரு சில பாக்டீரியாக்கள் மற்றும் உலோகக் கலவைகள் இருப்பதால் செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். அதேசமயம் அந்த நீரை பயன்படுத்தி பாத்திரங்களையும் கழுவலாம். இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது. 

கழிவறையில் ஃபிளஷ் செய்வதற்கும் ஏசியில் இருந்து வடியும் நீரைப் பயன்படுத்தலாம். தினசரி கழிவறையில் பல லிட்டர் தண்ணீர் வீணாகிறது. எனவே இனி ஏசியிலிருந்து வடியும் நீரைப் பயன்படுத்தி வீணாகும் நல்ல தண்ணீரை சேமிக்கலாம். 

நீங்கள் ஓர் தொழில் முனைவோராக மாற விரும்பினால், பல வீடுகளிலிருந்து கிடைக்கும் ஏசி கண்டன்சேட் தண்ணீரை சேகரித்து, மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கக் கொடுக்கலாம். அதில் உலோகங்களும் ரசாயனங்களும் இருப்பதால், அந்த நீர் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும். 

இந்த நீரை சமைப்பதற்கோ அல்லது துணி துவைப்பதற்கோ பயன்படுத்த வேண்டாம். இதில் பல பாக்டீரியாக்களும், உலோகக் கலவைகளும் இருப்பதால், அதை மனிதர்கள் நேரடியாக நுகர்வதற்கு பாதுகாப் பானது அல்ல. எனவே இதை மற்ற விஷயங்களுக்குப் பயன்படுத்துவது மூலம் அந்த நீர் வீணாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com