திருச்சியில் காண்பதற்கு அருமையான 24 இடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

திருச்சியில் காண்பதற்கு அருமையான 24 இடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

1. மலைக்கோட்டை:  உலகிலுள்ள மிகப் பழமையான மலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதாவது, இமய மலைக்கும் முந்திய மலை. கிரீன்லாந்தில் உள்ள மலைகளைப் போன்ற பழமையான மலை.

2. ஸ்ரீரங்கம் கோவில்:   வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக கருதப்படுகிறது. கோவில் கோபுரம் தெற்காசியாவிலேயே உயரமானது.

3. உத்தமர் கோவில்:  பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்ற மும்மூர்த்திகள் தங்களது மனைவிகளுடன் எழுந்தருளி இருக்கும் ஒரே கோவில்.

4. கல்லணை:  கரிகால் சோழனால் 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணை. உலகின் பழமையான அணைகளில் ஒன்று. உலகின் நான்காவது பாசனத்திற்கான அணை. மேலும், இந்தியாவின் மிகப் பழமையான அணை.

5. திருவானைக்காவல் கோவில்:  பஞ்சபூத தலம். நீருக்கான தலம். சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றது. 

6. பல்லவர் கால குடவரைக் கோயில்கள்: கற்களால் கோயில்கள் எழுப்புவதற்கு முன்பாக பல்லவர்களால் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடவரைக் கோயில்கள். திருச்சி மலைக்கோட்டையில் உள்ளன.

7. லூர்து அன்னை தேவாலயம் :  பிரான்சில் உள்ள லூர்து அன்னை ஆலயத்தின் மறுஆக்கம் இந்த தேவாலயம். இது 220 அடி உயர கோபுரத்தை உடையது.

8. சமயபுரம் மாரியம்மன் கோவில் :  தமிழ்நாட்டின் மாரியம்மன் கோவில்களில் பிரதானமான ஒன்று. பழனிக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடா வருடம் இங்கு கூடுவர்.

9. வயலூர் முருகன் கோவில்:  அருணகிரிநாதருக்கு முருகன் திருப்புகழை எடுத்துக் கொடுத்த கோவில். கிருபாநந்த வாரியாருக்கு மிகவும் பிடித்த கோவில்களில் ஒன்று.

10. திருவெள்ளறை கோவில் :  திவ்யதேசங்களில் ஒன்று. இங்கும் குடவரைக் கோயில்கள் உள்ளன. இங்கு ஸ்வஸ்திக் அமைப்பில், குளம் உள்ளது. அது மாமியார் -மருமகள் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு படித்துறையில் இருப்பவர்களை மற்றொரு படித்துறையில் பார்க்க முடியாது.

11. உறையூர் நாச்சியார் கோவில்:  7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால வைணவக் கோவில்.

12. உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி கோவில்:  7ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிவன் கோவில்.

13. குணசீலம் கோவில் :  மனநலம் குன்றியவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் கோவில். இங்கு தமிழக அரசின் மனநல மேம்பாட்டு மையம் உள்ளது.

14. உறையூர் வெக்காளி அம்மன் கோவில் :  அம்மன் சன்னதிக்கு மேலே கூரையில்லாத கோவில். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்.

15. எறும்பீஸ்வரர் கோவில்:  திருவெறும்பூரில் உள்ள 7ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால சிவன் கோவில். இங்கு கர்நாடக யுத்தத்தின் போது ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு படைகள் முகாமிட்டன.

16. அரசு அருங்காட்சியகம்:  ராணிமங்கம்மாள் கூடம். ராணி மங்கம்மாளின் பேரன் சொக்கநாத நாயக்கர் வசித்த அரண்மனை, இப்போது அருங்காட்சியகமாக உள்ளது.

17. முக்கொம்பு :  முக்கொம்பு அணை, நல்லதொரு சுற்றுலா தலம்.

18. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் : இந்த ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில். ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய கோவில்.

19. திருப்பட்டூர் பிரம்மா கோவில் :  திருப்பட்டூர் பிரம்மா கோவில் பிரம்மாவிற்கு உள்ள அரிதான கோவில்களில் ஒன்று. இங்கு உள்ள தியான மண்டபம் பிரசித்தி பெற்றது. 

20. நந்திகோயில் :  தெப்பக்குளம் அருகிலுள்ள நந்திக்கான கோயிலில் உள்ள நந்தி, இந்தியாவிலுள்ள பெரிய நந்திகளில் ஒன்று.

21. பார்த்தசாரதி விலாஸ் : திருவானைக்கோவில் அருகே உள்ள பார்த்தசாரதி விலாஸ் மசால்தோசைக்கு பிரபலமானது.

22. நன்றுடையான் கோவில் :  திருச்சியில் கிழக்கு புலிவாட் சாலையில் உள்ள விநாயகர் கோவில் பழமையானது. 7ம் நூற்றாண்டை சேர்ந்தது. நாயன்மார்களால் பாடப்பெற்றது.

23. பட்டாம்பூச்சி பூங்கா:  அருமையான பட்டாம்பூச்சி பூங்கா எல்லா வயதினருக்கும் ஏற்ற இடம்.

24. அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில்: தற்போது மிகுந்த பிரபலம் அடைந்து வரும், அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் காணவேண்டிய கோவில்களில் ஒன்று. தெற்கு ஷீரடி என்று அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com