பயணம் மேற்கொள்ள பயமா? பயத்தை போக்க இதெல்லாம் உதவும்!

பயணம் மேற்கொள்ள பயமா? பயத்தை போக்க இதெல்லாம் உதவும்!

யணம் செய்வது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றுதான். அதிக அளவு சாகசங்கள் நிறைந்தும் பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள பயணங்களின் மூலம் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளும்போது பயணக் கவலை ஏற்பட்டு, பயணங்களில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்படும். மேலும் இதனால் அதிக மன அழுத்தமும் உண்டாகலாம்.


முக்கியமாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வது, கூட்டமான ரயிலில் பயணம் செய்வது போன்றவை இந்த கவலைகளை அதிகரிக்க செய்யும். தெரியாத இடங்களுக்கு பயணம் செய்வது, வெளி ஆட்களை சந்திப்பது போன்ற பிரச்னைகள் நமக்கு உண்டாகலாம். இவற்றில் இருந்து வெளிவர உதவும் சில எளிய வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

* பயண கவலையிலிருந்து வெளிவருவதற்கு முதலில் உங்களது பயத்திற்கும் மன அழுத்தத்திற்கும் எது காரணம் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு விமானத்தில் செல்லும்போது உங்களுக்கு பயம் ஏற்பட்டால் பறப்பதால் உங்களுக்கு பயம் ஏற்படுகிறதா அல்லது தெரியாத இடத்திற்கு செல்வதால் பயம் ஏற்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும். ஒரு முறை இதனைக் கண்டறிந்தால் அதனை சமாளிக்கும் வழிமுறைகளை நீங்கள் எளிதாக கண்டுகொள்ளலாம்.

* சரியான முறையில் திட்டம் தீட்டி உங்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்படும் வாய்ப்பானது குறைகிறது. என்னவிதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டும், பயணங்களின்போது எங்கெல்லாம் தங்க வேண்டும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


*மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை செய்வது உகந்ததாக இருக்கும். ஆழமான மூச்சு பயிற்சி, யோகா ஆகியவை இதற்கு உதவும்.

*பயணங்களின்போது தேவைப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் வேறு இதர பொருட்களை பேக் செய்துகொள்வது பயணங்களின்போது தேவையற்ற மன அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். அதுபோலவே உங்களுக்கு பிடித்த புத்தகங்கள், உங்களை மகிழ்விற்கும் சில விஷயங்களை நீங்கள் பயணங்களின்போது எடுத்துச் செல்லலாம்.


*மிகுந்த எதிர்பார்ப்புடன் எந்த இடத்துக்கும் செல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் நாம் நினைக்கும் திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாமல் போகும் நிலை உண்டாகும். இவையெல்லாம் பயணத்தில் சாதாரணமாக நிகழ்பவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

*ஒருவேளை உங்களுக்கு பயணங்களின்போது கவலை அதிகரித்தால் இது குறித்து உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கலாம். இதிலிருந்து வெளிவருவதற்கும் உங்களது பயங்களை போக்குவதற்கும் அவர்கள் உங்களுக்கு உதவக் கூடும்.

*பயண கவலை உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளாமல், ஆரம்பத்தில் சிறு பயணங்களை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட தூர பயணங்களுக்கு திட்டம் தீட்டலாம். இதன் காரணமாக உங்களது உடல் மற்றும் மனம் இரண்டுமே பயணங்களுக்கு ஏற்ற வகையில் முன்னரே தயார் செய்யப்பட்டு விடும். உங்களது பயண அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றும்.

என்ன நண்பர்களே... மகிழ்ச்சியான மனநிலையுடன் டூர் போக தயார்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com