சுற்றுலா இன்பமாக அமைய செக் லிஸ்ட் - 8

சுற்றுலா இன்பமாக அமைய செக் லிஸ்ட் - 8

தேர்வுகள் முடிந்து விடுமுறை குஷியில் இருக்கும் குழந்தைகளுடன், குடும்பமாகச் சுற்றுலா பயணம் செல்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. சில விஷயங்களை முன் யோசனையுடன் கவனித்தால், பயணம் இன்பச் சுற்றுலாவாக அமையும். இல்லையெனில் மூட் அவுட்டாகி துன்பச் சுற்றுலாவாகி, அவதிப்பட நேரிடும்.

வெளியூருக்கு அல்லது மலைப் பிரதேசங்களுக்கு செல்வதற்கு முன் அங்கிருக்கும் தங்கும் விடுதிகள். நமக்குப் பிடித்த உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் போகுமிடத்தில், வண்டியை விட்டு இறங்கியதும், யாரிடமும் ஏமாறாமல், நல்ல ஓட்டலாகப் பார்த்துப் போக முடியும்.

யண டிக்கெட்டுகளை, ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு, ஒரிஜினல் டிக்கெட்டைப் பத்திரமாக கைப்பையில் வைக்கவும். ஜெராக்ஸ் டிக்கெட்டை, நாம் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்களிலும் வைத்துக் கொண்டால், ஒருவேளை டிக்கெட் தொலைந்தாலும், ஜெராக்ஸைக் காண்பிக்கலாம். பணம், டிராவலர்ஸ் செக், கிரெடிட் கார்டு எல்லாவற்றையும். ஒரே பையில் வைக்காமல், தனித்தனியே பத்திரமாக வைக்கவும். இதனால் ஏதேனும் பெட்டி அல்லது பேக் தொலைந்து போனாலும் மற்றது கைகொடுக்கும்.

சிறு குழந்தைகளுடன் பிரயாணம் செல்லும்போது, அவர்களின் விளையாட்டு பொம்மைகள், அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள், வண்ணம் தீட்டும் ஓவியப் புத்தகங்கள், கலர் பென்சில்களையும் கொண்டு செல்லவும்.

சுற்றுலா செல்லும் இடத்தில் உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்களேயானால், அவர்களின் விலாசம், டெலிபோன் நம்பர்களைக் குறித்து வைத்துக்கொள்ளவும். புது இடத்தில், அவசரத்திற்கு உதவி கேட்க வசதியாக இருக்கும். அவர்கள் வீட்டுக்குப் போகும்படி நேர்ந்தால், கண்டிப்பாக சிறிய அளவிலாவது, பரிசுப் பொருளை உடன் கொண்டு செல்லவும்.

ய்வில்லாமல் பயணப்பட்டால், அடுத்த நாள் ஊர் சுற்றிப் பார்க்கும்போது, களைப்புதான் ஏற்படும். பகலில் பயணம், இரவில் ஓய்வு என்று முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி, பயண டிக்கெட்டுகள் வாங்குவது நல்லது.

ருந்துகளுக்கு என்று தனி 'மெடிகல் கிட் பேக்' வைத்துக்கொள்வது நல்லது.

ல ஊர்களில் பலதரப்பட்ட உணவுகளை, சாப்பிடும்படி நேரிடலாம எளிதில் செரிக்கக்கூடிய, ஆவியில் வெந்த உணவுகளாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

வீட்டைப் பூட்டும் முன், தண்ணீர்க் குழாய்கள் மூடப்பட்டுள்ளதா, கேஸ் சிலிண்டர் மூடியுள்ளதா என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும். அத்துடன் டெலிபோன், கம்ப்யூட்டர், டீவி போன்ற மின்சார இணைப்புகளையும் துண்டித்து விட வேண்டும். இல்லாவிடில் இடி, மின்னல் வந்தால், 'இன்ப சுற்றுலா' முடிந்து, வீடு திரும்பும்போது ஆயிரக்கணக்கில் செலவழிக்க நேரிடும் வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com