நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்! எங்குள்ளது? எப்படிப் போவது?

பயணம்
நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்! எங்குள்ளது? எப்படிப் போவது?

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் ஆந்திரப் பிரதேசத்தின் மையப்பகுதியில் மறைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சோலையாகும். பறவைகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம் என்றே கூறலாம். தமிழக வடக்கு எல்லையிலிருந்து நாம் பயணிக்கும் தூரத்தில்தான் இந்த பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இயற்கை நிறைந்த சூழலுக்கு மத்தியில் இதம் காண விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த அழகிய பறவைகள் சரணாலயத்தின் அதிசயங்களைத் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டில் இருந்து நெலப்பட்டுக்கு செல்லும் பயணத்தில், என்னுடன் நீங்களும் இணையுங்கள். 

நெலப்பட்டு பயணம்:

மது பயணம் துடிப்பான வட தமிழகத்திலிருந்து தொடங்குகிறது. (ஏனென்றால் நான் அங்குதான் வசிக்கிறேன்!) நெலப்பட்டு பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல சாலை வழி பயணம்தான் பெஸ்ட். ஏனெனில் செல்லும் வழியில் இருக்கும் அழகிய நிலப்பரப்புகளை ரசித்துக்கொண்டே பயணிக்கலாம். இந்த சரணாலயம் சென்னைக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து அங்கு செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சாலையைப் பொறுத்தவரை நன்கு பராமரிக்கப்பட்டு ஒரு மென்மையான சுவாரஸ்ய அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்து நெலப்பட்டு வந்து சேர்ந்தவுடன், நகரின் சலசலப்பிலிருந்து விலகி புத்துணர்ச்சி கிடைத்தது. அமைதியான சுற்றுச்சூழல் என்னை பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்றது. 

சரணாலயம்

458 சதுர கிலோமீட்டரில் பறந்து விரிந்துள்ள நெலப்பட்டு சரணாலயம், பல்வேறு வகையான பறவை இனங்களின் முக்கிய வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயத்தின் இதயமே நெலப்பட்டு ஏரிதான். இது பறவைகள் செழித்து வளர்வதற்கான உயிர் நாடியாக உள்ளது. இந்த ஆழமற்ற ஏரியில் வளர்ந்துள்ள நாணல்கள் எண்ணற்ற பறவைகளுக்கு சிறந்த தங்குமிடமாக விளங்கி, இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.

வெளிநாட்டு பறவைகள்

ந்த சரணாலயத்தின் சிறப்பம்சமே அங்கு வரும் வெளிநாட்டு பறவைகள்தான் எனக் கூறுகிறார்கள். இது பல்வேறு வகையான புலம்பெயர் பறவைகளின் வசிப்பிடமாக உள்ளது. எனவே, பறவை ஆர்வலர்கள் இந்த இடத்தை ஒருபோதும் தவற விடக்கூடாது. இங்கே என்னென்ன பறவைகள் அதிகமாக இருக்கும் என விசாரித்தபோது பிளமிங்கோ, பெலிக்கன், நாரைகள், ஹராக்கண் மற்றும் பல வகையான வெளிநாட்டு வாத்துகள் வரும் எனக் கூறினார்கள். நான் சென்றதோ வெயில் காலம் என்பதால் அந்த அளவுக்கு பறவைகள் இல்லை. ஆனால், மழைக் காலம் முடிந்து,  குளிர்கால தொடக்கத்தில் இந்த சரணாலயம் பரபரப்பாக இருக்குமாம். வெளிநாடுகளில் இருந்து பல பறவை இனங்கள் அந்நாட்களில் இங்கு அதிக அளவில் வரும் எனச் சொல்கிறார்கள்.

இந்த சரணாலயத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு சிறந்த நேரம் எதுவென்றால் அதிகாலை மற்றும் பிற்பகல்தான். இந்த நேரத்தில் அங்குள்ள பறவைகளையும் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தையும் சிறப்பாகக் காண முடியும். இவற்றைக் காண்பதற்கு தொலைநோக்கி (binoculars) மற்றும் கேமராவை எடுத்துச் செல்ல தவறாதீர்கள். 

இயற்கை பாதைகள்

தைப் பற்றியும் சிந்திக்காமல் ஜாலியாக இயற்கை எழில் மிகுந்த சோலையில் நடக்க விரும்புபவர்களுக்கு நெலப்பட்டு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சுற்றிலும் சதுப்பு நிலங்கள், ஆழமற்ற நீர்நிலை வழியாக வளைந்து செல்லும் அழகிய நடைபாதைகள் என சிறப்பான அனுபவத்தை இந்த இடம் கொடுக்கும். பறவைகளின் அழகை ரசிக்கவும், அவற்றின் வசிப்பிடங்களை கண்காணிக்கவும், அமைதியான சூழ்நிலையில் உங்களை மூழ்கடிக்கவும் இந்த பாதைகள் உங்களுக்கு உதவும். 

பாதுகாப்பு முயற்சிகள்

ந்த சரணாலயத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதை ஒரு சுற்றுலா தலமாக மட்டும் பாராமல் பறவைகளை பாதுகாக்கும் மையமாகவும் நினைத்து அதை பராமரிக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களும், சரணாலயத்தை முறையாக பராமரிக்கும் பணியாளர்களும் இந்த பறவைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர். 

நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலராக இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி நெலப்பட்டு பறவைகள் சரணாலயத்திற்கு கட்டாயம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். இது உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும். எனவே உடனடியாக உங்கள் பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு, இந்த சரணாலயத்திற்கு ஒரு ட்ரிப் ஷெட்யூல் செய்துவிடுங்கள். ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் இந்த பறவைகளின் சொர்க்கத்தில் நீங்களும் கொஞ்சம் இளைப்பாரிவிட்டு வாருங்கள். என்னைப்போல! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com