மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 100 பேர் நிலைமை பரிதாபம்!

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 100 பேர் நிலைமை பரிதாபம்!

மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சைமாணிக்ககற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்த 70 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில், இன்று காலையில்நிலச்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து சுரங்கத்தின் அருகிலிருந்த ஏரியிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால் அங்கு பணீயிலிருந்த 100 பேர் சுரங்கத்திலிருந்து வெளீயேற இயலாதவகையில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு சட்டவிரோதமாக சுரங்கப்பணிகள் நடைபெற்றதால் அங்கு எவ்வளவு பேர் பணிபுரிந்தனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை என்றும் மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

இதே சுரங்கத்தில் ஏற்கெனவே 2020-ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200 பேர் இறந்தனர். தற்போது விபத்து ஏற்பட்ட சுரங்கமே, உலகளவில் பச்சை மாணிக்க கற்கள் அதிகமாக வெட்டியெடுக்கப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com