இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்கள் யார் தெரியுமா...?

செப்டம்பர்-15 தேசிய பொறியாளர் தினம்!
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்கள் யார் தெரியுமா...?

ந்தியாவின் முதல் பொறியாளர் சர். எம். விஸ்வேஸ்வரய்யா என்பது பலருக்கு தெரிந்திருக்கும். பெண்களில் முதல் பெண் பொறியாளர் என்ற பட்டத்தை பெற்றவர் யார் தெரியுமா? அய்யா சோமயாஜுலா லலிதா என்பவர்தான். 1919ல் ஆகஸ்ட் 27 அன்று சென்னையில் இருந்த ஒரு மிடில் கிளாஸ் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தான் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி  இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கு முதன்முதலாக சேர்ந்த பெண்மணி.

அப்போது அதன் பெயர் CEG- காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி. முதல் பெண் பொறியாளரான லலிதா திருமணமாகி கணவரை இழந்தவர். 15 வயதில் திருமணம். மூன்று வருடங்களில் கணவர் காலமானார். அப்போது அவரின் பெண் குழந்தைக்கு 4 மாதம் தான் ஆகியிருந்தது. லலிதாவின் தந்தை கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் என்பதால் இவருக்கும் பொறியியல் படிக்க ஆர்வம் ஏற்பட்டு படிக்கலானார்.

 1939 ம் ஆண்டு சென்னை ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இண்டர்மீடியட் தேர்ச்சிப்பெற்றார். தனது சகோதரர்கள் போல தானும் பொறியியல் கற்கவிரும்பி  பொறியியல் படித்தார். இவர் படித்தது பொறியியல் எலெக்ட்ரிக்கல் பிரிவு. இவர் 1940 ல் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலானார். அடுத்த ஆண்டு நாளிதழ் விளம்பரம் மூலம் லலிதாவிற்கு ஜூனியராக சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தனர் கேரளா மாநிலத்தின் பி. கே. தெரேசியா மற்றும்  லீமா ஜார்ஜ்.

1940 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது 4 வருட படிப்பு 3 வருடங்களுக்கு குறைக்கப்பட்டது. 1943 ம் ஆண்டு லலிதாவுடன் சேர்த்து பி. கே. தெரசியா மற்றும் லீமா ஜார்ஜ் என்று மூன்று பேருக்கும் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியியல் பட்டம் வழங்கப்பட்டது.

லலிதா AEI என்ற புகழ்பெற்ற  எலெக்ட்ரிக்கல் கம்பெனியில் பணியாற்றினார். இந்திய முழுவதும் மின் சப் ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு என பல திட்டங்களிலும் பணியாற்றினர். இந்தியாவின் புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் இவர் வடிவமைத்ததே. தன் தந்தையுடன் இணைந்து மின் இசைக்கருவிகள், புகையில்லா  அடுப்பு போன்றவைகளை தயாரித்தார்.

1964-ம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த முதல் பெண்கள் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார் லலிதா. 1965-ம் ஆண்டு லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார்.

லலிதா 1977 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவர் தனது சகோதரியுடன் தென்னிந்தியாவில் பயணம் செய்தார். 1979 ஆம் ஆண்டில், அவர் 60 வயதாக இருந்தபோது, ​​​​ அவர் மூளை நோயால் தாக்கப்பட்டார், சில வாரங்களுக்குப் பிறகு அக்டோபர் 12 அன்று இறந்தார்.

லீமா ஜார்ஜ் மற்றும் தெரேசியாவும் கேரள மாநிலத்தில் சிவில் இன்ஜினியர்களாக பணியாற்றினர். அதில் தெரேசியா கேரள பொதுப்பணித்துறையின் முதல் தலைமை பொறியாளராக பணியாற்றினார். இவர் தான் ஆசியாவின் முதல் பொதுப்பணித்துறையின் பெண் தலைமை பொறியாளர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - இயந்திர அமைப்புகளின் ஆய்வு, ஆண்கள் மட்டுமே ஆர்வமாக இருக்கக்கூடிய மற்றும் நியாயப்படுத்தக்கூடிய ஒரு துறையாக எப்போதும் கருதப்படுகிறது. இவற்றை எல்லாம்  பொருட்படுத்தாமல் இந்தியாவின் முதல் பெண் மெக்கானிக்கல இன்ஜினியரிங் மாணவியாக பெங்கால் இன்ஜினியரிங் கல்லூரியில் 1947 ம் ஆண்டு சேர்ந்தார் மேற்கு வங்க மாநிலத்தின் இலா முஜாம்தர் எனும் பெண்மணி. இவர் 1951 ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில்  பட்டம் பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com