விவேகானந்தரின் பொன்மொழிகள்!
சாதி, சமய, மத பேதங்களால் பிளவுபட்டிருக்கும் உலகை, அன்பால் இணைக்க உழைப்பதே, உண்மையான சமயம் மதம்.
வாழ்க்கையை சுபிட்சமாக மாற்றிக் கொள். அதற்காக சுயநலமாக மாறிவிடாதே. திறக்க இயலாத கதவுகளையும் அன்பு திறக்க செய்யும்.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும். எதையும் துணிந்து செய்யுங்கள். அச்செயல் அனைவருக்கும் நன்மை தருவதாக இருக்கட்டும்.
அறியாமை தான் துர்பாக்கியத்தின்ஆணிவேர். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது, பொய்க்கு இணையானது.
பேராசை, உடல் இச்சை, தற்பெருமை ஆகிய மூன்றும் மக்களை அழித்து விடுகிறது. நல்ல நூல்கள் இன்றும், என்றும் நல்ல நண்பர்கள். இன்று என்பது நம் கையில். நாளை எனப்படுவது இறைவன் கையில் உள்ளது.
உலக நன்மைக்காயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்.
கல்வி என்பது மனிதனின் ஆளுமையை வளர்ப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். உங்கள் உதடுகள் மூடிக் கொள்ளட்டும். உங்கள் மனம் திறந்து கொள்ளட்டும்.
உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். நமக்கு தேவை எஃகு போன்ற நரம்புகளும், இரும்பை போன்ற தசைகளும் தான்.
உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லையெனில் கடவுளே நேரில் வந்தும் பயனில்லை.