உங்கள் குழந்தையின் அறிவுத்திறனை வியக்கத்தக்க அளவில் உயர்த்துவது எப்படி?

உங்கள் குழந்தையின் அறிவுத்திறனை வியக்கத்தக்க அளவில் உயர்த்துவது எப்படி?

ரு குழந்தை பிறந்த கணத்திலிருந்து அதனுடைய ஆறாவது வயது வரை அதன் மூளை ஏராளமான விஷயங்களைப் பதிவு செய்துகொண்டு வாழ்நாள் முழுமைக்குமான அறிவுத் தெளிவைப் பெற்றுக் கொள்ளும் சக்தி கொண்டது.

இப்படிப்பட்ட திறன் படைத்த உங்கள் குழந்தைக்கு 30 வினாடிகளுக்குள் 10 அற்புதமான விஷயங்களைப் பற்றிய அறிவைப் புகட்டி விடலாம்.

இப்படியாக 125 ட்ரில்லியன் (லட்சம் கோடிகள்) விஷயத் துளிகளை (facts). பதிவு செய்யக்கூடிய திறன் படைத்தது நமது மூளை.

ஆகவே ஆர்வமே வெற்றியின் அளவுகோல் பிலடெல்பியாவிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுபவம்:

1. குழந்தைகள் உண்பதை விட கற்பதை விரும்புகிறார்கள்.

2. விளையாட்டை விட கற்பதை விரும்புகிறார்கள்.

3. உயிர் வாழ்வதற்கான திறமை கல்விதான்.

4.கல்வி என்பது அறிவு வளர்ச்சி.

5. அறிவுத் திறனின் அடிப்படையை அதிகமாக்கினால் அதிக புத்தி உருவாகிறது.

எப்படி உங்கள் அருமைக் குழந்தைக்கு இளவயதிலிருந்து உயர்ந்த கல்வி அறிவை வேகமாக, எளிமையாக, சந்தோஷமான முறையில் அளிக்க முடியும்?

1.படிப்புத் திறன், 2. கணிதத் திறன், 3. விஷயஞானம் (Encyclopedic knowledge) இந்தத் திறனை ஆறு வயதில் ஒரு குழந்தைக்கு உருவாக்குவதை விட ஒரு வயது குழந்தையின் மூளையில் பதியவைப்பது சுலபம் என்று தெரிகிறது. ஆகவே விஷய ஞானத்தை வளர்ப்பது அவசியம்.

எப்படி? அறிவுத்திறன் விஷய ஞானத்தை நிகழ்ச்சிகளின் மூலம் பெறுகிறது. பிறந்த மூன்று மாதக் குழந்தைக்கு இந்த அறிவுத்திறனை சிறு சிறு நிகழ்ச்சிகளின் மூலம் வியக்கத் தகுந்த வகையில் ஏற்படுத்தலாம்.

ஆனால் அவை கீழ்க்கண்ட இயல்புடையதாக இருக்க வேண்டும்.

1. அவை உண்மை நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும. நமது கருத்தாக இருக்கக் கூடாது. (Facts not opinions)

2. அவை மிகச் சரியானதாக இருக்க வேண்டும். (Precise)

3. தனித்தனி விஷயமாக இருக்க வேண்டும். (Specific)

4. குறிப்பிட்ட பெயருடையதாக இருக்க வேண்டும். (Unambiguous)

5. புதிய விஷயமாக பார்ப்பதற்குப் பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

6. உரத்த குரலில் உச்சரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணம்: இந்திரா காந்தியின் படத்தைக் காண்பிப்பது நம் குறிக்கோளானால், அப்படம் பெரிய அளவில் (6"X 8") ஆக இருக்க வேண்டும்.

அவர் பெயரைத் தெளிவாக உரத்த குரலில் படத்தை குழந்தை பார்க்கும் போது தாயார் உச்சரிக்க வேண்டும்.

படத்தில் இந்திரா காந்தி தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. அவர் பெயர் பின்புறம் தெளிவாக எழுதப்பட வேண்டும்.

படம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவர் பெயருடன் வேறு சொற்கள் இருக்கக் கூடாது. (உ.ம். பிரதமர் என்றும் இருத்தல் கூடாது)

இந்த வகையில் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளின் அறிவைத் தூண்டி அவர்களுக்கு உலகின் உயர்வை யெல்லாம் அளிக்க விரும்பும் பெற்றோர்கள் யார்? எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

1. அன்பு, மரியாதை, சந்தோஷம், கவனிப்பு இவற்றை உங்கள் குழந்தைக்கு வழங்குவதில் உயர்ந்த முக்கியத்துவம் அளிப்பவர்களாக...

2. தங்கள் பொழுது போக்குகளை விட குழந்தைக்கு அறிவை வளர்ப்பது மிகுந்த சந்தோஷமானது என்று கருதுபவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கென்ன - நாங்கள் இப்போதே தயார் என்கிறீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com