'உண்டு இல்லை'ன்னு பண்ணிட்டா...

'உண்டு இல்லை'ன்னு பண்ணிட்டா...

ஜோக்ஸ்

ஓவியம்; பிள்ளை

" உங்க மனைவிகிட்ட காபி உண்டா இல்லையான்னு கேட்டிங்களே.. என்ன ஆச்சு.."

" என்னை 'உண்டு இல்லை'ன்னு பண்ணிட்டாள் .."

***************************************

“என்னங்க.. என்னைப் பார்த்து அழகா இருக்கறதா சொல்லிட்டு இருப்பானே ரமேஷ். அவன் இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கானாம்...”

“பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க....”

***************************************

"புதுசா ஏதோ பூமராங் பூரிக்கட்டைன்னு வந்திருக்காமே...?”

“ஆமாம் மேடம்..! இதை நீங்க உங்க புருஷன் மேல விட்டெறிஞ்சா அவரை பதம் பார்த்துட்டு மறுபடியும் உங்க கைக்கே திரும்ப வந்துடும்...”.

-ஆர். பிரசன்னா ஸ்ரீரங்கம்

***************************************

ஏண்டா, அந்த சர்வர் உன்னை முறைக்கிறார்?

டிப்ஸ் கேட்டார், இட்லி சாஃப்ட் ஆக இருக்க அவல் சேர்க்க சொன்னேன், அதான்‌ முறைக்கிறார்.

***************************************

ஏம்மா,கிரிக்கெட் மாட்ச் பார்க்கணும், சேனலை மாத்தாதேன்னு சொல்றேன்ல்ல…

முடியாதுங்க, என்ன பண்ணுவீங்க…?

பார்த்துக்கறேன், பார்த்துக்கறேன்டி…

என்னது?

இல்லைமா, நீ வைக்கிற சேனலையே பார்க்கறேன் சொன்னேன்.

-மகாலட்சுமி சுப்பிரமணியன்

***************************************

"என்னோட மூத்த பையன் வீட்டு புரோக்கர்'; அடுத்தவன், வக்கீல்..!"

"அப்போ பொய் சொல்ல போட்டி நிறையவே இருக்கும்னு சொல்லுங்க

***************************************

"10 - நாளா 'கேஸ் டிரபிள் ' னு  இன்னைக்கு வந்திருக்கீங்களே..?"

"கொஞ்சம் கேஷ் டிரபிளும் இருந்ததால முன்னாடியே வர முடியலை டாக்டர் ...!"

-விரேவதி தஞ்சை

***************************************

“என் வீட்டுக்காரருக்கு இங்கிதமே தெரியலை”

“என்ன பண்ணாரு ?”

 “அவரோட சொந்தக்காரங்க முன்னாடியும் எனக்கு பயப்படுறாரே...”

- இரா. அருண்குமார்,வாணரப்பேட்டை.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com