கடிகாரம் ஏன் ஓடல?

கடிகாரம் ஏன் ஓடல?

ஜோக்ஸ்!

"ஃப்ளையிங் விசிட்ல நாத்தனார் வீட்டுக்கு போறேன்..''

" ரெண்டு நாள் தங்குவியா?"

"இல்லே.....சட்டு புட்டுன்னு சண்டையை முடிச்சுக்கிட்டு திரும்பிடுவேன்.

--------------------------------------------------------------------

" காசியில் போய் காஞ்சிபுரம் இட்லி கேட்டேன்..''

''என்ன சொன்னாங்க..''

 ''காஞ்சிபுரத்துக்கு போய் காசி அல்வா  கேளுன்னு அனுப்பிட்டாங்க.''

---------------------------------------------------------------------

" திருடன் வந்தால் கட்டிப் போடலாம்னு கயிறு வாங்கி வச்சிருந்தேன்."

" என்ன ஆச்சு?"

" அந்த கயிற்றில் என்னை கட்டிப் போட்டுட்டு எல்லாத்தையும் திருடிட்டுப் போயிட்டான்."

----------------------------------------------------------------------------------

" டி.வி.யில திருவிழா ஒளிபரப்பு சரியா இல்லையே ஏன்?." 

"ஏன் என்னாச்சு மேடம்?"

"கூட்டத்துல நின்ன என்னைக் கவர் பண்ணிக் காட்டலையே!"

-------------------------------------------------------------------------

" கடிகாரம் ஏன் ஓடல?" 

" ஓட முடியாமல் ஆணி அடிச்சு சுவரில்‌  மாட்டி வச்சா அது எப்படி ஓடும்?"

---------------------------------------------------------------------------

''ஐஸ் காபியை ஏன் ஆத்திக் குடிக்கிறே?"

''குடிக்க முடியாத அளவுக்கு  கோல்டா இருக்கே.''  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com