51 வருட மருத்துவமனை! என்ன ஆச்சு?

மும்பை பரபர!
51 வருட மருத்துவமனை! என்ன ஆச்சு?

மும்பை ஆரே காலனியில், ஆரே நிர்வாகத்துக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. 51 ஆண்டுகள் பழைமையான இம் மருத்துவமனையை மும்பை மாநகராட்சியிடம் ஆரே நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

பழங்குடியின மக்கள் நலன் கருதி ஆரே காலனியில் 1971 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த மருத்துவமனை பாழடைந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு நோயாளி கூட சிகிச்சைக்கு வரவில்லை. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மட்டுமே கொண்ட மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து ஆரே பகுதியைச் சார்ந்த மக்கள் சிலர் கூறியதாவது:

ஆரே மில்க் காலனிக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்த மருத்துவமனை ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அநேக கர்ப்பிணிகளுக்கு இங்கே பிரசவம் நடந்தது. மருத்துவமனையில் விஷ முறிவு மருந்துகளும் இருந்தது. அதற்கு காரணம், ஆரே காலனியில் பாம்பு போன்ற விஷஜந்துக்கள் கடித்து விட்டால், உடனடியாக இம்மருத்துவமனையில் விஷம் அகற்றப்பட்டது. ஆரே காலனிக்கு வெளியே இருக்கும் மருத்துவமனைக்குச் செல்வது சிரமமாக இருப்பதால், மும்பை மாநகராட்சி இதைப் புதுப்பித்து மீண்டும் இயக்கினால், எங்கள் பகுதி மக்களுக்கு அரசு செய்யும் பேருதவியாக இது இருக்கும்” என்பதாகும்.

(புதிய மருத்துவமனை உருவாகுமா?)

பிரியாவிடை யாருக்கு?

மும்பையிலுள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF) யில், கடந்த 9 ஆண்டுகளாக அலெக்ஸ், ஜிங்கோ, ஆஸ்கர் ஆகிய 3 லேப்ராடர் வகை நாய்கள் பணியாற்றின. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவில் இருந்து செயல்பட்ட இவைகள் 9 ஆண்டுகள் பணிசெய்தபின் ஓய்வு பெற்றன. இதையொட்டி இந்த நாய்களுக்கு விழா நடத்தப்பட்டு ‘பிரியாவிடை’ அளிக்கப்பட்டது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றிற்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் சோதனையின்போது இந்த நாய்களை வெடிகுண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும்.

பிரிவு உபசார விழா நடந்த சமயம், ‘அலெக்ஸ்’ அதன் பராமரிப்பாளரிடமிருந்து பிரிந்து செல்ல மறுத்தது. சிறப்பாக செயல்பட்ட 3 நாய்களின் செயல்பாட்டை வீர்கள் நினைவு கூர்ந்தனர். நாய்களைப் பராமரித்தவர்கள், CISF வீரர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

இதுபற்றி மும்பை விமான நிலைய CISF துணை IG கூறியதாவது:

லெக்ஸ், ஜிங்கோ, ஆஸ்கார் ஆகிய 3 நாட்களும் 2 மாத குட்டிகளாக இருந்தபோது CISFஇல் இணைக்கப்பட்டு, மும்பை விமான நிலைய வெடிகுண்டு கண்டறியும் படையில் 9 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றின. கடந்த 2014 ஆம் ஆண்டு பிறந்த இவைகள் இப்போது CISF வீரர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

CISFஇல் 14 நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஓய்வு பெற்ற நாய்கள் உள்பட 12 நாய்கள் லேப்ராடர் வகையையும், மற்றவை ஜெர்மன் ஷெப்பர்டு, குகர்ஸ்பேனியர் வகை ஆகும்” என்பதாகும்.

ஹேப்பி ரிடையர்மெண்ட்!

மார்ச்சில் மழைப்பொழிவு!

டந்த 17 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு சமீபத்தில் மும்பையில் பதிவானது. கொலாபாவில் 34.3 மி.மீ.ம்; சாந்தாகுரூசில் 16.6 மி.மீ மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு அதிக மழை பதிவானது 17 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும் என்று கூறினர்.

(‘மார்ச்சில் மழை! மும்பை மக்கள் மகிழ்ச்சி!’)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com