அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வருவது லாபகரமானதா ?

அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வருவது லாபகரமானதா ?

மெரிக்கா செல்லும் சில இந்தியர்கள், அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அதிக மெனக்கெடல் செய்கின்றனர். அவ்வாறு மெனக்கெடுதல் அவசியமா என்று பார்ப்போம்.

ஒளிபரப்பு தொழில்நுட்பங்களின் வித்தியாசம் (Broadcasting technology difference)-

மெரிக்காவில் என்டிஎஸ்சி (NTSC) என்ற ஒளிபரப்பு தொழில்நுட்பம் உள்ளது. இந்தியாவில் பால் (PAL) என்ற தொழில்நுட்பம் உள்ளது. அமெரிக்காவில் வாங்கிய தொலைக்காட்சியை இந்தியாவில் பயன்படுத்த வேண்டுமெனில், ஒளிபரப்பு மாற்றுக் கருவியை (Convertor) வாங்க வேண்டும். அதற்கு கூடுதல் செலவாகும். மேலும், இவ்வாறு மாற்றி உபயோகப்படுத்துப் போது, ஒளிக்கற்றைகளில் இழப்பு (signal loss) ஏற்படும். காணொலியின் ஒளிபரப்பு தரம் குறையும். சில சமயங்களில், தொலைகாட்சியின் காணொலி புதிப்பிப்பு விகிதத்தை (Refresh rate) மாற்றி பயன்படுத்த முடியலாம். ஆனால், உத்திரவாதமில்லை.

கீழடுக்கு மின்மாற்றி (step down transformer) தேவை;

ந்தியாவில் மின்சாரம் 230 வோல்ட் என்ற அளவில் உள்ளது. அமெரிக்காவில் மின்சாரம் 110 வோல்ட் என்ற அளவில் உள்ளது. எனவே, கீழடுக்கு மின்மாற்றி (Step down transformer) பயன்படுத்த வேண்டும். அதற்காக தனியாக பணம் செலவாகும். மேலும், இவ்வாறு மின்மாற்றி இன்றி உபயோகப்படுத்தினால், தொலைக்காட்சி பெட்டியின் மின்சுற்றுகள் பாதிக்கப்பட்டு, தொலைக்காட்சி பெட்டி பழுதடையும் வய்ப்புகள் அதிகம்.

சுங்க வரி (customs duty) செலுத்துதல்;

மெரிக்காவில் வாங்கிய தொலைக்காட்சியை இந்தியா கொண்டுவரும் போது, சுங்க வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவில் வாங்கியதற்கான ரசீது காட்ட வேண்டும். பழைய தொலைக்காட்சி எனில், அந்த தொலைக் காட்சியின் தேய்மானம் (depreciation) இந்திய விலையில் கணக்கிடப்பட்டு, சுங்க வரி விதிக்கப்படும். புதிய தொலைக்காட்சி எனில், தற்போதைய இந்திய விலையில் சுங்க வரி விதிக்கப்படும்.

பெரிய மூட்டை முடிச்சுக்கான கட்டணம்(over sized baggage charges);

தொலைக்காட்சி பெட்டியானது, அனுமதிக்கப்பட்ட மூட்டை முடிச்சுக்கான அளவிலிருந்து, அதிகமாக இருப்பதால், பெரிய மூட்டை முடிச்சுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

சரியாக கையாளப்படாவிட்டால் உடைய வாய்ப்பு;

தொலைக்காட்சி பெட்டியை எடுத்து வரும் போது, விமானப் பணியாளர்கள் அதனை சரியாக கையாளாவிட்டால், அதில் ஏதேனும், சிறிய சிராய்ப்போ அல்லது உடைசலோ ஏற்பட்டால், எடுத்த வந்த சிரமம் வீண்

அமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு இந்தியாவில் பழுது பார்ப்பது கடினம்;

மெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி தினுசுகள்(models) இந்தியாவில் அப்படியே கிடைக்குமென்று சொல்ல முடியாது. எனவே, பழுது ஏற்பட்டால், அதற்கு நம்புறுதி (warranty) சேவை மையங்களில் கிடையாது. மேலும், அதன் உதிரி பாகங்கள் இந்தியாவில் கிடைப்பது கடினம். சேவை மையங்களில் அந்த தினுசு தொலைக்காட்சி பெட்டிகளை சரி செய்வது கடினம்.

இந்தியாவிலேயே தொலைக்காட்சிகள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கின்றன;

மிகப்பெரிய தொலைக்காட்சி பெட்டிகளைத் தவிர(65 இன்ச் மேற்பட்டவை போன்றவை), மற்ற தொலைக் காட்சிகள் இந்தியாவிலேயே சலுகை விலையில் கிடைக்கின்றன. எனவே, மிகவும் சிரமத்துடன் அமெரிக்காவில் வாங்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவதுதான் சிறப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com