சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் இராஜாஜி பிறந்த தினம் !

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் இராஜாஜி பிறந்த தினம் !

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னராக இருந்த ராஜாஜி அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளை பகிர்ந்துக் கொள்வோமே!

1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் 'டிரான்சிஸ்டர்' ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள்.

இப்படி 'கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்' என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி.

Rajaji
Rajaji

குழப்பங்களுடன் முதல்வரான ராஜாஜி:

1952 தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் பிரகாசம் தலைமையிலான கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் இணைத்து 'ஐக்கிய ஜனநாயக முன்னணி' என்ற பெயரின் 166 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஓய்வில் இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சியமைக்க விரும்பினார்கள். இதனால் காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சுயேச்சைகள் என பல கட்சிகளின் ஆதரவுடன் ராஜாஜி ஆட்சியமைத்தார்.

அதன்பின்னர் பல சுயேட்சை உறுப்பினா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் ஆனார்கள். 1952 ஏப்ரல் 1 ஆம் தேதி 152 ஆக இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா்கள் எண்ணிக்கை செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி 167 ஆக ஆனது. ராஜாஜி அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் அவர் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டது, அதன்பின்னர் அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தின் முதல் சட்டமன்றத்தின் முதலமைச்சர் 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பதவியேற்றார். அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு 140 தொகுதிகள் அம்மாநிலத்திலும், 5 தொகுதிகள் மைசூரிலும் இணைக்கப்பட்டது. இதன்பிறகு ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் உள்ளிட்ட சிக்கல்களால் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் காமராசர் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com