சித்ரா பௌர்ணமி சிறப்புகள்!!

சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர் சூரியன். அதே போல் அந்த மாத பௌர்ணமி அன்று முழுமதியாக திகழ்பவர் சந்திரன்.
ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி சிறப்புக்குறியதாக மாறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று களங்கம் இல்லாத முழு நிலவின் அழகை கண்டு ரசிக்க கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள்.
அவரவர் வீடுகளில் செய்த சித்ரா அன்னம் எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து நிலா சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களுடைய ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைபிடித்த நல்ல வழி இது.

சித்ரா பௌர்ணமி சிறப்புகளாக பல ஆன்மீக வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் சிறப்பு மிக்க வைவபமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம்.
பௌர்ணமி கிரிவலம்!
திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது மாதம் தோறும் பௌர்ணமி நாளில் இறைவனே மலையாக இருக்கும் திருவண்ணாமலை மலையை அனைவரும் வலம் வந்து வணங்குவார்கள். மற்ற பௌர்ணமி தினங்களைவிட சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியின் போது பூமியின் இறை சக்தியின் ஆற்றல் அதிகம் பரவுவதாக ஆன்மீகம் பறைசாற்றுகிறது.
மேலும் ஆன்மீக பூமியான திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று அறிவுருவமாக இருக்கும் சித்தர்கள் பலரும் சித்ரா பௌர்ணமியின் சூட்சம வடிவங்களில் மக்களோடு மக்களாக கிரிவலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, சித்ரா பௌர்ணமி அன்று சிவ சிந்தனையோடு மனதில் எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிவனின் அருளோடு சித்தர்களின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம் சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் வெளியில் வருவதால் சித்தர்களின் ஜீவ சமாதியில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்று சித்தர்கள் சமாதிக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி சித்தர்களை மட்டுமே மனதில் இருத்தி தியானம் செய்தால் ஏதோ ஒரு வடிவில் சித்தர்கள் நமக்கு காட்சி கொடுத்து அருளாசி புரிவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் கிரிவலம் செல்வதோடு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் இறைவனின் அருளை பெற்று தரும்.

கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஓர் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது உத்தமும் அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம் பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது நல்லது கிரிவலத்தின் போது எலுமிச்சம்பழம் கொண்டு செல்வது எதிர்மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது.
கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக அதிகம்.
பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவ தீட்ச்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் பிறவி இல்லா பெரும் வாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கப் பெறலாம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் எப்படியும் வரவேண்டும் என்று நினைவோடு அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அதோடு இந்தப் பூமியை பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.
இரண்டடியில் ராஜ சூய யாகம் செய்த பலனும் சர்வ தீர்த்தம் ஆடிய பலனும் வந்து சேரும்.
மூன்றெடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்து ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும்.
இரண்டு அடிக்கு லிங்கம் பிரதிஷ்டை செய்த பலன் பெறலாம் . மூன்றடிக்கு கோவில் கட்டிய பேறு கிடைக்கும் திருவண்ணாமலை சுற்றி கிரிவலம் வருவோரின் கால் தூசி பட்டதால் மனித தேகத்தின் பிறவிப் பணி நீங்கும் என்று கிரிவலத்தின் வகைகள் பற்றி கூறுகிறது அருணாச்சல புராணம்.