கோடிக்கணக்கில் ஒரு முதலை நெக்லஸ்!

கோடிக்கணக்கில் ஒரு முதலை நெக்லஸ்!

பாலிவுட் பூமராங்!

கோடிக்கணக்கில் ஒரு முதலை நெக்லஸ்!

கேன்ஸ் நகரில் (பிரான்ஸ்) நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய மாடலுமான ஊர்வசி ரவ்டேலா கலந்துகொண்டு அழகான ரோஸ் கலர் ஸ்ட்ராலெஸ் கவுன் அணிந்து நடந்து வருகையில் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் அவரது கழுத்திலிருந்த முதலை வடிவ நெக்லஸின் மீது இருந்தது. ஊர்வசி வெளியிட்ட போட்டோக்களை அநேக ரசிகர்கள் ஜும் செய்து முதலை உருவிலிருந்த நெக்லஸைக் கண்டு பாராட்டினர். சிலர் அதை வைத்து மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்தனர். நெக்லஸ் விலை ` 276 கோடி எனக் கூறப்பட்டது.

இதைக் கண்ட நகை நிபுணர் அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவ்டேலா அணிந்திருந்த நெக்லஸ் போலியென இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார். மேலும் அதில் அவர் கூறியுள்ளது என்னவென்றால் “ஊர்வசி கார்டியரின் ஒரிஜினல் மரியா ஃபெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்து இருக்கிறார்? காதணிகளை செய்தவர் யார்? விளக்கம் தெரியாவிட்டால் தூக்கம் வராது. “கேன்ஸ்” கார்டியரின் சொந்த நாடு. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகையின் போலி பீஸை அணிவது; அதுவும் நம் நாட்டில் சார்பில் கலந்துகொண்டு நிஜ கார்டியர் அணிந்ததுபோல நடிப்பது எல்லாம் வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் ஸ்பெஷலான நகைகளை அவர் அணிந்திருக்கலாம்” என்பதாகும்.

இதற்குரிய பதிலை ஊர்வசி ரவ்டேலாவின் இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அவரது மக்கள் தொடர்பு குழு விளக்கமளித்துள்ளது. அதில் “ஊர்வசி ரவ்டேலா போலி நெக்லஸை அணியவில்லை. அவர் அணிந்திருந்த முதலநை நெக்லஸ் ஒரிஜினல்தான். அதன் விலை `200 கோடியிலிருந்து 276' கோடி வைர உயர்ந்துவிட்டது” எனக் கூறப்பட்டு இருந்தது.

276 கோடியா? வாயைப் பிளக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஊர்வசி ரவ்டேலா இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

(அதிக மதிப்புள்ள நகையணிய அதிர்ஷ்டம் வேண்டும்!)

தலாய்லாமாவுடன் ஒரு சந்திப்பு!”

20 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் பிரீத்தி ஜிந்தா, கடந்த சில வருடங்களாக, நடிக்காமல் ஒதுங்கி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக இருந்ததிலிருந்தும் விலகி இருக்கிறார்.

தற்சமயம் தனது கணவருடன் சேர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் தலாய்லாமாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “தர்மசாலாவில் இந்தச் சந்திப்பு நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். தர்மசாலாவில் புனித தலாய்லாமாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்தது எதிர்பார்த்தது.

நாங்கள் அவருடன் சிறிது நேரம் செலவழித்துப் பேசியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். அவர் எங்களுடன் ஞான முத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

பல்வேறு சிக்கல்களில் இருக்கும் பிரீத்தி ஜிந்தா, தனிப்பட்ட முறையில் தலாய்லாமாவை சந்தித்தது முக்கியமானதாக கருதப்படுகிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

(நல்லது நடக்க வேண்டுவோம்!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com