E.M.I. ல் மாம்பழம்!

மும்பை பரபர
E.M.I. ல் மாம்பழம்!

வீடு, வாகனம் என்றில்லாமல் ஃப்ரிட்ஜ்; டி.வி, மொபைல் என எல்லாமே EMIயில் மாற்றிக்கொள்ள சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.

கையில் காசு இருக்கிறதோ, இல்லையோ, வசதி இல்லாத மக்களையும் கவரும் வகையில் தவணைத்திட்டம் வர, மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என்பது உண்மை.

பொருட்களுக்கு மட்டும்தானா EMI? மாம்பழத்துக்கும் தருகிறேன் என்று பூனேயைச் சேர்ந்த அல்போன்சா மாம்பழ வியாபாரி கவுரவ் சளாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “கொரோனா பரவலுக்குப் பிறகு வருவாய் பாதிக்கப்பட்டதால், அல்போன்சா பழங்கள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், இதன் விலை மற்றைய மாம்பழங்களைவிட அதிகம்தான்.

இந்த EMI ஐடியா மூலம், அல்போன்சா மாம்பழ விற்பனை உயருமென்ற நம்பிக்கை உள்ளது. ` 5,000க்கும் மேல் மாம்பழம் வாங்குவோருக்குத்தான் இந்த EMI வசதி. கிரெடிட் கார்டில் வாங்குவோர்,
3,6,12 மாதத் தவணைகளில் பணத்தைச் செலுத்தலாம்.

தற்சமயம் அல்போன்சா விலை ` 800 முதல் `1300வரை விற்கப்படுகிறது. இந்த EMI திட்டத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள குறைந்தது 6 டஜனுக்கு மேல் அல்போன்சா மாம்பழங்கள் வாங்க வேண்டும்” என்பதாகும்.

(முதல்ல மாம்பழம் வாங்கிச் சாப்பிடுங்க! காசை EMIல கட்டுங்க! சூப்பர் பழ ஐடியா!)

முதல் டிஜிட்டல் கோர்ட்

வி மும்பையில் உள்ள வாஷியில் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட் காகிதமில்லா (டிஜிட்டல்) நடைமுறையில் செயல்பட உள்ளது. இது நாட்டிலேயே முதல் டிஜிட்டல் கோர்ட்டாகும். இதன் தொடக்க விழாவில் நீதிபதி கூறியதாவது.

“இ –ஃபைலிங் வசதியில் செயல்படும் டிஜிட்டல் கோர்ட் தொடங்க பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஆனால், வாஷி கோர்ட் வழக்கறிஞர்கள் இதை ஆதரித்தனர்.  கோர்ட்டின் முழுப் பணியும் காகிதமற்ற நடைமுறைக்கு மாறியதால் தீர்ப்புகள் விரைவாக இருக்கும்” என்பதாகும்.

(பலே பலே)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com