லச்சித் பர்புகன்!

லச்சித் பர்புகன்!

ச்சித் பர்புகனின் (Lachit  Barphukan) 400ஆவது பிறந்த தின விழா நவம்பர் 23 முதல் 25 வரை அஸ்ஸாம் மாநிலம் மற்றும் தலைநகரில் விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

யார் இந்த லச்சித்...?

சாமின் முதல் பர் பருவா மற்றும் மன்னர் பிரதாப் சிங்காவின் கீழுள்ள அஹோம் ராணுவத்தின் தளபதியான மொமாய் தரலி பர்பருவாவின் இளையமகன் லச்சித் ஆவார்.

1228ல் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில், அஹோம் பேரரசு நிறுவப்பட்டது.

லச்சித்தின் தந்தையார், நான்கு ரூபாய் கடனுக்காக, கொத்தடிமைத் தொழிலாளியாக இருந்து பின்னர் அமைச்சராகவும், பிரபுவாகவும் மாறினார்.

இன்றைய அசாமில் அமைந்துள்ள அஹோம் ராஜ்ஜியத்தின் தளபதியாக லச்சித் பர்புகன் திறமையாகப் பணிபுரிந்தார்.

லச்சித் பர்புகன்
லச்சித் பர்புகன்

சராய்காட்:-

1671ஆம் ஆண்டில் நடைபெற்ற சராய்காட் போரில், முதலாம் ராம் சிங்கின் தலைமையில், முகலாயப் படைகள் அஹோம் அரசைக் கைப்பற்ற முயற்சித்தனர். பல்வேறு போர்முறைகளைக் கையாண்டு, திறமையாக போர் புரிந்து அஹோம் அரசை லச்சித் காப்பாற்றினார். முகலாயப் படைகள் பின்வாங்கின.

லச்சித் திவஸ்:-

ச்சித்தின் வீரத்தையும், சராய்காட் போரில் வெற்றி பெற்றதையும் நினைவு கூறும் வகையில் நவம்பர் 24, லச்சித் தினம் (திவஸ்) என்று அழைக்கப்பட்டு, அசாமில் கொண்டாடப்பட்டு வருகிறது.

150 அடி உயரம் கொண்ட இவரது வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

அசாமின் ஜோர்ஹட்டில் இவரது நினைவாக கல்லறை (மைடம்) கட்டப்பட்டுள்ளது.

நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் சிறந்த தேர்ச்சி பெற்ற Cadet ற்கு 1999 முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘லச்சித் பர்புகன்’ தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

மேலும், ‘தை அஹோம்’ யுவ பரிஷத் வழியே அசாமின் குறிப்பிடத்தக்க நபர்களுக்கு விருதுகள் வழங்கப் படுகின்றன.

லச்சித் பர்புகன் நினைவு கூறப்பட வேண்டிய ஒரு சிறந்த ராணுவத் தளபதி ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com