மருத்துவ குணம் கொண்ட துளசி!

மருத்துவ குணம் கொண்ட துளசி!

துளசி விவாகம்

துளசியை மாடத்தில் வைத்து தெய்வமாக தினமும் வழிபடுவது நம் வழக்கம். தீபாவளிக்குப் பிறகு வரும் துவாதசி, உத்தான துவாதசி ஆகும். அந்த நாளை கர்நாடக மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் துளசி கல்யாணமாக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். துளசி மாடத்தை சுத்தம் செய்து, அலங்கரித்து, கோலமிட்டு, துளசிக்குப் பூ மாலைகள் சூட்டி, ஆபரணங்கள் அணிவித்து பூஜை செய்து கொண்டாடுகின்றனர். பல வித பலகாரங்கள் நைவேத்தியம் செய்வதும் வழக்கம். இனி துளசி பற்றிய தகவல்கள்: 

* ம் நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. கிரேக்க, பிரஞ்சு மொழிகளில், அரசனுக்கு இணையானது என்ற பொருள் கொண்ட பெயர் துளசிக்கு உண்டு. ஆங்கிலப் பெயருக்கு தூய ராஜ செடி என்று பொருள். 

* துளசியின் மற்ற பெயர்கள்: திருத்துழாய், துலபம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கௌரி, மாதவி, ஹரிப்ரியா, அமிர்தா, சுரபி ஆகியவை ஆகும்.

*துளசி கலந்த நீர் கங்கைக்கு ஒப்பானதாகும். துளசியால் அர்ச்சனை செய்வது விஷ்ணுவுக்கு பிரியமானது. துளசியில் மும்மூர்த்திகளும், தேவர்களும் வசிக்கிறார்கள். பெருமாள் கோயில்களில் தரப்படும் தீர்த்தம் துளசி கலந்த நீரே ஆகும்.

* துளசி இலை, விதை, தண்டு, வேர் எல்லாமே பூஜைக்கு உரிய வைதான். ஞாயிறு, செவ்வாய்,  வெள்ளிக் கிழமைகளில் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. சதுர்த்தசி, அஷ்டமி, பௌர்ணமி, ஏகாதசி தினங்களிலும், இரவு நேரங்களிலும் துளசியை பறிக்கக் கூடாது.

* துளசி பூஜைக்கு உகந்தது மட்டுமல்ல, கிருமி நாசினியும் கூட. மருத்துவ குணங்களும் கொண்டது. துளசி மாதாவை தினமும் பூஜை செய்தால், இவ்வுலக வாழ்வு இன்பமாக இருக்கும். முக்தியையும் அடையலாம். துளசி இருக்கும் இடத்தில் தேவர்கள் வாசம் செய்கின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com