விமானத்தில் பறக்கும் நாமக்கல் முட்டைகள்...

விமானத்தில் பறக்கும் நாமக்கல் முட்டைகள்...

ந்திய அளவிலானமுட்டைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் நாமக்கலுக்கு முக்கிய பங்குண்டு.   இப்படி சிறப்பு மிக்க நம்மூர் முட்டைகள் விமானத்தில் பயணித்து மலேசியா செல்லப் போகிறது என்பது மலேசியாவில் உள்ள  முட்டை விரும்பிகளுக்கும் உற்பத்தியாளர் களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி.

      இது குறித்து நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவரும், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவருமான சிங்கராஜ் தெரிவித்த தகவல் இதோ.

       நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதம் எட்டு கோடி முட்டைகள் என்ற அளவில் கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதன் முறையாக விமானம் மூலம் 54 ஆயிரம் முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

        அங்கு பரிசோதனை முடிந்த பிறகு, மேலும் இருபது கண்டெய்னர்களில் வாரம்தோறும் சுமார் ஒரு கோடி முட்டைகள் வீதம் மாதம் நான்கு கோடி முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உண்டு.

      இதனால் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உருவாகும். மலேசியாவிற்கு முட்டைகள் ஏற்றுமதி அதிகரிக்கும்போது 15 கோடிகள் வரை அனுப்பும் வாய்ப்புள்ளது“ என்றவர் மேலும் பேசும்போது,

“பண்ணைகள் பராமரிப்பு வாகனங்களை மருந்து அடித்தபின் பண்ணைகளுக்குள் அனுமதிப்பது, வெளி ஆட்களை கிருமி நாசினி உபயோகித்த பின் அனுமதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் கோழிப்பண்ணைகளில் மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் பகுதியில் பறவைக் காய்ச்சலுக்கு வாய்ப்பு இல்லை. பராமரிப்பு மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழகமே இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது“ என்று பெருமிதத்துடன் கூறினார்.

       சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தந்து உற்பத்தி செய்யப்பட்ட நம்மூர்  முட்டைகளுக்கு இனி வெளிநாடுகளிலும் மவுசு ஏறத்தான் போகிறது!

 பிறகு; தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் அதில் உள்ள புரோட்டின் சத்து உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது எனும் கருத்து உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உணவுகளில் முட்டையும் ஒன்று. இதிலுள்ள சத்துக்களை வறிய நிலையில் உள்ள குழந்தைகளும் பெற வேண்டும் என்பதாலேயே நம் அரசுப்பள்ளி சத்துணவில் முட்டையும் தரப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com