நாடு போற்றும் பொங்கல் திருநாள்!

நாடு போற்றும் பொங்கல் திருநாள்!

ஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாட ப்படுகிறது. அறுவை முடிந்த வயல்களில் கொட்டகைகள் போட்டு முதல் நாள் இரவு இளைஞர்கள் விருந்து உண்பர். மறுநாள் காலையில் கொட்டகைக்கு தீ வைப்பதுடன் அறுவடைத் திருநாள் ஆரம்பமாகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத் துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பர்.

மாராட்டியர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

முதல் நாள்: போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேப்பை மாவில் ரொட்டியுடன் காய்கறி கூட்டும் செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபின் சாப்பிடுகிறார்கள்.

இரண்டாம் நாள்: சங்கராந்தி அன்று வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கிறார்கள். கூடவே ஏதாவது ஓர் இனிப்பும் செய்து பழம், கரும்பு ஆகியவற்றை படைக்கிறார்கள். எல்லோருக்கும் எள்ளுருண்டை கொடுக்கிறார்கள். மனிதர்கள் சமாதானமாக இருக்க உறுதி எடுக்கிறார்கள்.

மூன்றாம் நாள்: கிங்கராந்தி அன்று எண்ணெயில் பொரித்தெடுத்த வடை செய்கிறார்கள். பவுஷ் (தை) மாதம் குளிரா இருக்கும். அதனால் உடலுக்குச் சூடு அளிக்கும் எள்ளை சேர்த்துக்கொள்கிறார்கள். மராட்டிய மக்கள் பொங்கலின்போது பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை வழங்குவது வழக்கம். அப்போது ‘தித்திப்பாகப் பேசு: சண்டை போடாதே’ என்று கூறுகிறார்கள்.

ந்திரா மாநிலத்தில் வயல்வெளியை, சூரியனை, மழையைத் தெய்வமாக வணங்கும் விழாவாக திறந்தவெளியில் பொங்கல் பானை வைத்து மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

கேரளாவில் பொங்கல் விழாவைப் பெண்கள் கொண்டாடுவர். இதற்கு ‘பொங்கலா’ என்று பெயர். இந்தப் பொங்கல் மகாசக்தியின் அருளைப் பெறுவதற்குக் கொண்டாடப்படுகிறது.

ஞ்சாப்பில் பொங்கல் பண்டிகையை ‘லோரி’ என்று அழைப்பர். இளவேனிற் காலம் தொடங்குவது பொங்கல் பண்டிகை.

காஷ்மீரில் கிச்சடி அமாவாசை என்ற பெயரில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் பொங்கலின் மறுபெயர் கங்கா சாகர் மேளா.  பொங்கல் அன்று கங்கைக் கரையில் ஆடிப்பாடி கும்மியடித்து ஒரே நேரத்தில் நதியில் நீராடி சூரியபகவானை வழிபடுவார்கள்.

ட நாட்டில் சில பகுதிகளில் தைப்பொங்கல் அன்று எமகண்ட நேரத்தில் சூரிய பகவான் உத்ராயனத்தில் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி அன்று எமராஜனை மகிழ்விக்கும் வகையில் எமகண்ட வேளையில் அவரது உருவ பொம்மைக்கு (அங்கு கடைகளில் எமதர்மராஜன் படம், உருவ பொம்மைகள் கிடைக்கும்) சந்தனம் இட்டு, மலர்சூடி, நிவேதனமாக கருப்பு – வெள்ளை எள் உருண்டையைப் பிரசாதமாகப் படைப்பார்கள்.

குஜராத்தில் பொங்கல் திருநாளை புனிதத் தினமாகக் கொண்டாடுகிறார்கள். புதுப் பாத்திரங்கள் வாங்கி அன்று பயன்படுத்துவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com