புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது?

புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது?

டலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள்.

1950- ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது.

தன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

ந்த மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.

2010ஆம்  ஆண்டு 5 முறை புயல் ஏற்பட்டது. அந்தப் புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன.இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

லைலா…ஓ லைலா…

ந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் ‘லைலா’ மையம் கொண்டு இருந்தபோது, அதன் போக்கை கணிப்பது சிரமமாக இருந்தது. அப்போது அது மேற்கு வங்கத்தை தாக்கும் பயமும் இருந்தது.

மசூலிப்பட்டினம் அருகே புயல் இருந்தபோது, மேற்கு வங்கத்திலும் அதன் பாதிப்பு காணப்பட்டது. அதன் கடலோர மாவட்டங்களான வடக்கு பர்கானா, தெற்கு பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர், ஹவுரா, ஹூக்ளி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது.

‘லைலா’வால் ஒரிசா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கர்நாடகாவிலும் தாண்டவமாடியது...

லைலா’வின் பாய்ச்சல் கர்நாடகா வரை சென்றது. அதன் ஆட்டத்தால் கர்நாடக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. காற்று விளாசியது. இதன் மூலம், 6 பேரை பலி வாங்கியது. சித்ரதுர்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் கருகி இறந்தனர். மற்றொரு இடத்தில் தென்னை மரம் விழுந்து ஒருவர் பலியானார். உடுப்பி மாவட்டத்தில் குண்டப்பூரில் மின்னல் தாக்கி மற்றொருவர் இறந்தார். பெல்லாரி மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். அந்த காலகட்டத்தில் கர்நாடகாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது லைலா... புயல்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com