குழந்தைகளுக்கான கதை சொல்லி சரிதா ஜோ!

குழந்தைகளுக்கான கதை சொல்லி சரிதா ஜோ!

கதை சொல்லல் என்பது  மகிழ்ச்சியின் திறவுகோல்

ரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான கதைசொல்லி எழுத்தாளர் சரிதா ஜோ. இவர் தனது கதை சொல்லும் நடையால் குழந்தைகளிடம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருபவர். இரண்டு குழந்தைகளின் அம்மாவான அவர் குங்ஃபு தற்காப்புக் கலையில் கருப்பு பட்டை பெற்றவர். ஆசிரியை - ஆர்ஜே, விலங்குகள் நல அமைப்பின் தூதுவர் என பல முகங்களுக்கு சொந்தகாரர். சரிதாவை சந்திப்போமா?

கதை சொல்லும் ஆர்வம் எப்பொழுது வந்தது?

னக்குச் சிறு வயது முதலே குழந்தைகள் மீது ஒரு பேரன்பு. எங்குச் சென்றாலும் குழந்தைகள் என்னுடன் மிக எளிதில் ஒட்டிக்கொள்வார்கள். என்னுடைய மகன்களான சஞ்சய் - சச்சின் இருவருக்கும் தினமும் கதைகள் கூறுவேன். அந்த நேரத்தில்தான் முகநூலில் கதை சொல்லல் என்ற ஒரு பதிவைப் பார்த்தேன்.

இப்படியெல்லாம் கதை கூறலாமா என்று யோசித்தபடி எங்கு அணுகுவது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஈரோடு நவீன நூலகத்தின் நூலகர் ஷீலா அக்காவை அணுகி அங்கு குழந்தைகளுக்கானக் கதை சொல்லலை முதன்முதலில் நிகழ்த்தினேன்.

படிப்படியாக குழந்தைகள் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். இப்படியாக தொடங்கிய என்னுடைய கதைசொல்லல் பயணம்.

இந்த நேரத்தில்தான் கொரோனா தொடங்கியது. தொடர்ந்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நூலகத்துக்குச் சென்று கதையைச் சொல்லிக் கொண்டிருந்த எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனாவுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் கதை எழுத ஆரம்பித்திருந்தேன்.

கொரோனா காலக்கட்டத்தைக் கதை எழுதுவதற்கும், யூடியூப் சேனல் தொடங்கி கதை சொல்லுவதற்குமான நேரமாகப்  பயன்படுத்திக்கொண்டேன். ஆன்லைன் நிகழ்வுகள் வழியாக ஏராளமான கதை சொல்லல் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்று கதைகளைக் கூறினேன்.

கதைசொல்லல்  வழியாக மாணவர்களிடம் தாங்கள் கற்றுக்கொண்டது என்ன?

தை சொல்ல செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் குழந்தைகளுடன் கதைகளை மட்டும் கூறி விடுவதில்லை அவர்களோடு ஆன உரையாடல் என்னை இன்னும் இன்னும் மேம்படுத்தியது.

குழந்தைகளின் சின்னச் சின்ன விருப்பங்கள் ஆசைகள் அனைத்தும் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அந்த மூட்டைகளில் இருந்து அவர்களின் ஆசைகளை பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறக்க வைக்க எண்ணினேன்.

கற்றல் என்பது வாழ்வின் எல்லை வரை ஏதாவது ஒரு வழியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் குழந்தைகளிடமிருந்து நான் கற்றது ஏராளம். எந்த ஒரு சூழ்நிலையிலும் எதையும் குழந்தை மனதோடு அணுகும் அணுகுமுறையையும், மனம் திறந்து பாராட்டும் பண்பையும் கற்றுக்கொண்டேன். எதையும் சுலபமாகக் கடந்து, அடுத்து என்ன என்று அதை நோக்கிச் செல்லும் மனநிலையும் அவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன் என்று கூற நான் விரும்பவில்லை. கதை சொல்லும் நேரத்தில் நடக்கும் உரையாடலின்போது மாணவர்களுக்குக் காது கொடுத்தேன் என்று வேண்டுமானால் கூறலாம். எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்குக் காதுகள் மறுக்கப்படுகின்றன. எது தேவையோ அதை குழந்தை களுக்குக் கொடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். வலுக்கட்டாயமாக எந்தக் குழந்தைக்கும் எதையும் திணிக்க விரும்பியதில்லை. கற்றுக் கொள், தெரிந்து கொள், அறிந்துகொள், புரிந்துகொள் என்று எல்லா இடங்களிலும் கட்டளைச் சொற்களைக் கேட்டு கேட்டு அதை வெறுக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லும்போது எந்த இடத்திலும் இந்தச் சொற்களை பயன்படுத்தியதில்லை.

குழந்தைகளின் சமுதாயம் மேம்பட  தங்களுடைய கருத்து என்ன?

குழந்தைகள் இளம் மனிதர்கள். அவர்களுக்கும் ஆசைகள், வெறுப்பு, இன்பம், துன்பம்... இப்படி எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனம் உண்டு.

நம்முடைய குழந்தை எப்படி வரவேண்டும் என்பது வேறு; எதுவாக வரவேண்டும் என்பது வேறு. எப்படி வரவேண்டும் என்பதை நாம் வாழ்ந்து காட்டினால் எதுவாக வரவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்குவது, அவர்களுக்குக் காது கொடுப்பது அவசியம். அவர் களுக்குப் பிடிக்காத ஒன்றில் அவர்களை வற்புறுத்தி நுழைக்காமல் இருந்தாலே குழந்தைகள் சமுதாயம் மேம்படும். அளவுக்கு மீறிய அன்பும் அரவணைப்பும் கூட அவர்களைச் செயல்பட வைக்காமல் தடுத்துவிடும். தேவையான இடங்களில் அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து, அவர்களை நடக்க விட்டு ஓட விட்டு அவர்களுடைய துறையை தேர்ந்தெடுக்க விட்டு ஒரு வழி தோழனாக செயல்பட்டாலே போதும்.

இவ்வளவு வளர்ந்த நமக்கே அங்கீகாரமும் ஊக்கமும் உற்சாகமும் தேவைப்படும் பொழுது குழந்தைகளுக்கு அது எவ்வளவு?! ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங் களுக்கும் அவர்களுக்கு அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பது மிக அவசியம்.

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து  வருகிறது இதுபற்றி?

ண்டிப்பாக செல்போன்  கூடாது என்ற காலகட்டத்தில் இருந்த நாம் இன்று கல்வியை இந்தக் கையடக்க பெட்டியின் வழியாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கதைகள் சொல்லுதல் என்று  குறைய ஆரம்பித்ததோ  அப்பொழுது டிவியும் 

செல்போனும்  அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன.  பெரியோர்களுக்கான, தாத்தா, பாட்டிகளுக்கான மதிப்பு என்று குறைந்ததோ  அன்று டிவியும்  செல்போனும்  நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டன.  பெற்றோர்கள் தங்களுடைய குடும்பத்தேவைக்காக ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

கண்டிப்பாக இன்றைய சூழலில் இருவரும் செயல்படத் தான் வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

காலை முதல் மாலை வரை வேலைக்குச் சென்று திரும்பும்பெற்றோர்கள் பள்ளிச் சென்று திரும்பும் குழந்தைகள்  என்று அனைவரையும் மாலை நேரங்களிலும் இந்தச் செல்போன் ஆக்கிரமித்து விடுகிறது.  செல்போனை விட டிவியை விடசுவாரசியமான ஒன்று  குழந்தைகளுக்கு வேண்டும். பெற்றோர்களாகிய நாம்  வேண்டும்.அவர்களோடு கூடி அமர்ந்து சின்ன சின்ன  விளையாட்டுக்களையும் கதைகளையும் கூறத் தொடங்கலாம்.

எந்த விஷயத்தையும் குழந்தைகளிடம் இருந்து அகற்ற  முயல வேண்டாம். குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கும் பொழுது நேரத்தை கவனத்தில் கொண்டு 
கொடுங்கள். 10 நிமிடம் 20 நிமிடம் திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். முதலிலேயே அவர்களுக்கு இன்னும் பத்து நிமிடத்தில் பெற்றுக் கொள்வேன் என்பதையும் அறிவுறுத்துங் கள். இப்படி குழந்தைகளை அந்த உலகத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து கதை எனும் மாயாஜால உலகத் திற்குள் உறவாடலாம்.

குழந்தைகளிடம்  வாசிப்புப் பழக்கத்தை எப்படி ஏற்படுத்துவது?

ற்கெனவே சொன்னதுதான்.பெற்றோர்களும் ஆசிரியர் களும்வாசிப்பதைப் பார்த்தால் குழந்தைகள் வாசிக்க  ஆரம்பிப்பார்கள். குழந்தை உட்கார ஆரம்பித் தவுடனேயே புத்தகங்களை நாம் கொடுக்க  ஆரம்பித்து விடலாம். அந்தக் குழந்தை அந்த புத்தகத்தை முதலில் கிழிக்கும். கிழிக்கட்டும்.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருக்கும் பொம்மைகளை பார்க்க ஆரம்பிக்கும். இப்படி அறிமுகப்படுத்தும் போது முதலில் முழுக்க முழுக்க படங்களாகவும் அதன்பிறகு வயது ஏற ஏற வார்த்தைகள் ஏறி படங்கள் குறைந்து கொண்டே வருவது போலவும் புத்தகங்களைத் தேர்வு செய்து குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கவேண்டும். ஆயிரக்கணக்கான விலைகொடுத்து ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுத்து அடுத்தநாளே உடைத்துவிட்டாலும் கவலைப் படாத பெற்றோர், குழந்தை ஒரு  புத்தகத்தைக் கிழித்துவிட்டால் கவலைகொள்கிறார்கள். திரும்பத் திரும்ப தொடர்ந்து புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்போம். புத்தகங்களில் இருக்கும் கதைகளைக் கூற  ஆரம்பிப்போம். சிறுவயதிலிருந்து 
வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கலாம்.           

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com