செம வசூலா? எதன் மூலம்?

மும்பை பரபர...
செம வசூலா? எதன் மூலம்?

க்டோபர் 31 அன்று பிறப்பிக்கப்பட்ட காவல்துறை உத்தரவின்படி, நவம்பர் 1 முதல் கார்களில் முன்சீட்டு மற்றும் பின்சீட்டுக்களில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட்பெல்ட் அணிவது மும்பை மாநகரில் கட்டாயமானது.

அணியாதவர்களுக்கு `200/- அபராதம். இதன்பிறகு விழிப்புணர்வுக்கு அவகாசம் அளித்து, நவம்பர் 1ற்குப் பதிலாக நவம்பர் 10ஆம் தேதி முதல் சீட்பெல்ட் அணிவது அவசியமென அறிவிக்கப்பட்டது.

மேலும் சில தினங்கள் விட்டுப் பிடித்து, நவம்பர் 15 முதல் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

இரு வாரங்களில் அநேகர் பிடிபட, அதற்கான சலான்கள் வழங்கப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த வசூல் `97 லட்சம் என்று கூறப்படுகிறது.

செம வசூல்தானே!

**********************

நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழ்நிலையில் இருந்த நடிகர்!

சொந்தக் கதையில், சோகக் கதையில்லாத மனித வர்க்கமே கிடையாது. ஆளாளுக்கு வேறுபடும். சிலவைகள் அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

பிரபல ஹிந்தி நடிகரும், டைரக்டருமான இவர், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் சோகக் கதையொன்றினை குறிப்பிட்டுப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:

“எனது தந்தையார் இந்தியில் படமொன்றைத் தயாரிக்கையில் நான் சிறுவன். ஜித்தேந்திரா; ரேகா போன்றவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தார். சரியானபடி கால்ஷீட் கொடுக்காத காரணம், படம் எடுத்து முடிக்க 8 ஆண்டுகள் ஆயின.

கடன் கொடுத்தவர்கள் உடனே மொத்தப் பணத்தையும் திரும்பக் கேட்டு தொல்லை கொடுக்கையில், தகப்பனார் அவர்களிம் கெஞ்சுவார். ஒருவேளை சாப்பாட்டிற்கே அது கஷ்டப்பட்ட காலம். வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலைமை. 10 வயது சிறுவனாகிய நான் அச்சம்பவத்தைப் பார்த்து பாதிக்கப்பட்டவன்.

நடிப்புத் தொழிலுக்கு வந்தபின், எந்தவொரு தயாரிப்பாளருக்கும் சிரமம் கொடுக்காமல் செயல்பட்டு வருகிறேன். நல்லதே நடந்து வருகிறது.

இனி இவருக்கு நல்லதே நடக்க வேண்டி, வாழ்த்தி வருகிறார்கள் நடிகர் ஆமீத்கானின் ஆயிரமாயிரம் ரசிகர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com