சோன்பூர் மேளா

சோன்பூர் மேளா

பீகாரின் தலைநகரான பாட்னா அருகிலுள்ள சாப்ராவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விலங்குகள் சந்தை கூடுகிறது. இந்த மிருக மேளாதான் சோன்பூர்மேளா எனவும் அழைக்கப்படுகிறது. நேபாளத்தில் இருந்து வரும் கண்டகி நதி, கங்கையுடன் சங்கமமாகும்.

கைரையிலிருக்கும் பழமையான பாபா ஹரிஹர்நாத் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள காலி நிலங்களை இந்த மேளாவிற்காக பீகார் அரசு ஒதுக்கி பராமரித்து வருகிறது.

வருடந்தோறும் கார்த்திகை பூர்ணிமாவில் தொடங்கும் இந்த சந்தை 21நாட்களையும் தாண்டி பல நாட்கள் நடக்கிறது. இதில் அரசு சார்பாக குதிரைப் பந்தயம், அதிகம் பால் கரக்கும் பசு மற்றும் எருமை மாடுகளுக்கான போட்டிகளும் நடைபெறும். அனைத்திற்க்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ட இந்தியாவில் மட்டுமன்றி மேற்கு வங்காளம்,நேபாளம் போன்ற நாடுகளிலிருந்தும் விலங்குகள் சந்தைக்கு வரும். யானை சந்தை முன்பிருந்தது. அசாம் மாநிலத்திலிருந்து அதிகம் வரும் யானைகள் ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போது தடை விதிக்கப் பட்டதால் யானைகள் வருவதில்லை. குதிரை சந்தை பிரபலமாகி பல ஜாதிக்குதிரைகள், வளர்ப்புக்கும், போட்டி களுக்கும் என வாங்கப்படுகிறது.

சோன்பூர் மேளாவை பசுமேளா எனவும் சொல்வர். அந்த அளவிற்கு இங்கு பசுக்கள் அதிகமாக விற்பனையாகிறது. பசுக்களைப் போன்று பேரம் அதிகம் பேசாமல் வாங்கப்படும் எருமைகளில் முர்ரா, சுருதி மற்றும், பைசன் எனும் வகைகள் அதிகமாக விற்பனையாகின்றன. ஆட்டுச் சந்தையும் இங்கு பிரபலமாக உள்ளது.

விதவிதமான பலவிதமான சாதி நாய்கள் இங்கு கிடைக்கும். நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வரும் போலீஸாருக்காக மோப்ப நாய்களும் இங்கு கிடைக்கும். இங்கு சிறிய இடத்தில் பெரிய கூண்டுகள் அமைத்து பறவைகள் சந்தையும் நடைபெறும். புராணக்காலத்து சந்தையாக கருதப்படும் இங்கு சாதுக்களும் அதிகம் வருவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com