ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட விருப்பமா...?
முதலில் இதைப் படிக்க வேண்டும்… வேண்டும்… வேண்டும்…!

ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட விருப்பமா...? முதலில் இதைப் படிக்க வேண்டும்… வேண்டும்… வேண்டும்…!

புத்தாண்டு பிறக்கப்போகிறது...

அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் வரப்போகிறது. அதற்கு முன் புத்தாண்டை வரவேற்க விதவிதமான கொண்டாட்டங்களும் நடைபெறப்போகிறது. இருப்பினும் மீண்டும் தலைகாட்டத் துவங்கியிருக்கும் கொரானா குறித்த விழிப்புணர்வுடனும் அரசு புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

     இதன் தொடர்ச்சியாக, புத்தாண்டை முன்னிட்டு சேலத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி எனப் பேசப்படும் ஏற்காட்டுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி  தலைமையில் ஏற்காட்டில் உள்ள அனைத்து வகையான தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் நிகழ்ந்தது.

சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி
சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி

அப்போது அவர் ஏற்காட்டில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக லாட்ஜ் மட்டும் விடுதிகளில் சில கட்டுப் பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அந்தக் கட்டுப்பாடுகள் எவை என்பதையும் விளக்கினார்.

     “விடுதிகளில் தங்கும் நபர்களின் பெயர் முகவரி செல்போன் எண் ஆகியவற்றை நன்கு விசாரணை செய்து அந்த நபர்கள் மூலம் எழுத்துப்பூர்வமாக பெறவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தாலோ அறை கேட்டு வந்தாலோ உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊழியர்களின் முழு விபரங்களையும் பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும். பணிபுரியும் நபர்களின் புகைப்படமும் வைத்திருத்தல் வேண்டும். விடுதியில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை தினமும் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேலாக அறை பூட்டி இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த அறையை தணிக்கை செய்ய வேண்டும். போலீசாரின் நடவடிக்கைகளுக்கு லார்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

        புத்தாண்டில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு அதிக அளவில் வருவதால் புத்தாண்டு அன்று எந்த அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் வருவோருக்கு விடுதி உரிமையாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அதனை மீறினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மது அருந்திவிட்டு பிறருக்கு தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசார் கடமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றவர் மேலும், புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து ஆட்டோ டாக்ஸி விடுதி லாட்ஜ் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்காடு காவல் அதிகாரிகளுடன் காட்டேஜ் உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் லாட்ஜ் விடுதி உரிமையாளர்கள் ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் உள்பட பலரும் கலந்து கூட்டத்தில் கொண்டனர் 

      காவல்துறை தங்கள் கடமையைச் செய்ய பொது மக்களாகிய நமது ஒத்துழைப்பும் அவசியம் தேவை. முக்கியமாக புத்தாண்டு போன்ற தினங்களில் குடிமகன்களான இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் நடு வீதிகளில் கேக் வெட்டி பிறருக்கு தொந்திரவு தருவது போன்ற செயல்கள் கண்டால் உடனே காவலருக்கு தெரியப்படுத்தி அவ்விடத்தில் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் தையல்நாயகி மேடம் தெரிவித்தார்!

       வாழ்க்கைக்கு கொண்டாட்டங்கள் அவசியம் தேவைதான். அது அடுத்தவருக்கு பாதிப்பு தராத வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com