எப்போ விடிவுகாலம்?

எப்போ விடிவுகாலம்?

கவிதை!

கிரிக்கெட் மட்டையை

கையில வச்சு

பந்து ஒண்ணைத் தூக்கிப் போட்டு

ஆடி ஓடி விளையாடுறவங்க

அறுபது எழுபது கோடின்னு

பல கோடி சம்பாதிக்கிறாங்க...

டிகையைக் கட்டிப்பிடிச்சு

நாலுபாட்டுக்கு டான்ஸ் ஆடி

பொய்யாய் சண்டை போட்டு

நடிக்கிற நடிகருங்க

எழுபது கோடி எண்பது கோடின்னு

எக்கச்சக்கமா சம்பாதிக்கிறாங்க...

பொய்கள் பல சொல்லி

ஓட்டுக்கள் பல வாங்கி

பதவிக்கு வரும் அரசியல்வாதிங்க

ஆயிரம் கோடிக்கு மேல சம்பாதிச்சு

ஆங்காங்கே வீடு, நிலம் வாங்கி

கணக்கில் வராம

கண்டபடி சேர்க்கிறாங்க...

தொழிற்சாலைகள் கட்ட

விவசாயத்தை அழிச்சு

தொழிலதிபர்கள் வங்கியில

பல கோடிகள் கடன் வாங்கி

கட்டாம ஏமாத்தி

தள்ளுபடின்ற பேர்ல

தப்பிச்சு போயிடுறாங்க...

நிலத்தோட மாரடிச்சு

மழையோட போராடி

வெயிலோட காய்ந்து

விவசாயம் பார்க்கும்

விவசாயிகள்

வருமானம் ஏதுமின்றி

வாங்கிய கடனை அடைக்க முடியாம

வட்டி கட்டவும் வழியில்லாம

அவமானம் தாங்க முடியாம

வாழ்க்கைய முடிச்சுக்கிறாங்க...

நாட்டுக்கு எது முக்கியம்னு

யாருக்கும் தெரியலங்க...

விவசாயமும் ராணுவமும்

மனுஷங்களோட ரெண்டு கண்ணு!

இவங்க மட்டும் இல்லன்னா

இருக்குமா நிம்மதியா இந்த மண்ணு!

சிந்திப்போம் கண்ணு!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com