பெண் அன்பு!

பெண் அன்பு!

பெண் அன்பு

ஆக்டோபஸ் போல

அரவணைத்தே வெல்லும்!

- மகனாய் அனுபவித்த சுகம்!

பெண் அன்பு

சூறாவளிக் காற்று!

நூறாண்டு மரத்தையும் வேரோடு சாய்த்துவிடும்!

- கணவனாய் கண்டுகொண்டது!

பெண் அன்பு

சுனாமியின் அலை!

இடம் மாற்றிக் கரை ஒதுக்கும்!

- மருமகள் கற்றுத் தந்த பாடம்!

எல்லாம்

முதியோர் இல்லம்

வந்த பின் பெற்ற ஞானம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com