இரவின் மடியில்...

கவிதை
இரவின் மடியில்...
Published on

ரவின்

மடியில் 

விழிப்போடு

பால்நிலாவின்

தண்ணொளி.

ளியின்

ஊடே

புற்களை

முத்தமிடும்

பனித்துளிகள்.

துளிகளைக்

கிரீடமாக்கி

புற்கள்

விழாமல்

ஏந்திடும்.

ந்திய

துளிகளில்

நிலவொளியின்

வண்ணச்

சிதறல்.

சிதறிய

நிலவொளியால்

வானப்பந்தலில்

மின்னும்

வைரப் பூக்கள்.

பூக்களின்

நடுவே

நிலவைக்கண்டு

கலந்தன

அல்லி.

பூச்சிகளின்

தாலாட்டில்

தன்னை

மறந்து

உயிர்கள்

உறக்கம்.

றக்கத்தில்

ஆழ்மன

எண்ணங்கள்

மேலெழும்பியது

கனவுகளாய்.

னவுகள்

விழித்திருக்க

கண்டவை

நாளை

விடியலில்

நனவாகும்.

னவாக

நம்பிக்கையோடு

முயற்சி

செய்திட

வேண்டும்.

வேண்டும்

ஓய்வைத்

தருவது

இனிதாம்

இரவின் மடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com