கவிதை : கொஞ்சம் பொறு

கவிதை : கொஞ்சம் பொறு

கவிதை

மௌனம் மட்டுமே என் மொழியென

நீயாக ஒரு முடிவுக்கு

வந்து விடாதே...

கொஞ்சம் பொறு! 

உன் அகங்காரத்தின் மேல் பூச்சி உதிர்த்து

உன் ஆணவத்தின் புறச் சுவர் தகர்க்கும்

என் ஒற்றைச் சொல்

வீழ்த்தி விடலாம் உன்னை...

கவுரவம் என்ற போர்வை 

கிழிந்து விடலாம் எந்த கணத்திலும்

அழுது அரற்றவும் நேரமின்றி 

அடைந்து போகலாம் உன்

ஆங்காரக் குரல்...

கொஞ்சம் பொறு!

சற்றே இளைப்பாறிக் கொள்கிறேன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com