கவிதை: வாழ்தலும், இருத்தலும்!

கவிதை: வாழ்தலும், இருத்தலும்!

கவிதை

உலகத்தொடு ஒட்டவொழுகுதலே 

வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று

குறிக்கோளின்றி வாழ்வதா 

வாழ்க்கை?

மானுட அகத்தோடு பொருந்தி

வாழ்தலே வாழ்க்கை!

மானுட அகம் விடுத்து வெளியுலகிற்காய் வாழ்வது

வாழ்வல்ல, பிழைப்பு.

மனதில் பிழைப்பு நிரப்பியது, வெறுமையும்

எரிச்சலுமே!

வறுமையில் உழல்வோர்க்குக்

வேண்டுவனக் கொடுத்து 

மகிழ்தலே வாழ்க்கை.

மனச்சிறையில் இருத்தல் வாழ்க்கையல்ல!

சென்றதை எண்ணி வருந்தாமல்

அன்றன்று வாழ்தலே வாழ்க்கை.

சின்னச் சின்ன செயல்களில்

கொண்டிடுக, ஈடுபாடு.

ஈடுபாடு தந்திடும் மனநிறைவு.

மனநிறைவோடு வாழ்தலே

நிறைவான வாழ்க்கை.

தோன்றிற் புகழொடு வாழ்தலே வாழ்க்கை!

யாருக்கும் பயனின்றி வாழ்வதே இருத்தல்.

இன்றைய பொழுதின் 

மகிழ்ச்சியைப் பெற்றிட

பிறர்நலம் பேணி மகிழ்வோடு வாழ்ந்திடுக!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com