விசித்திர மா மலை

விசித்திர மா மலை

கவிதை!

ஓவியம்; தமிழ்

தெய்வம் தோன்றுவதற்கு முன்

மனிதன் தோன்றுவதற்கு முன்

மனம் தோன்றுவதற்கு முன்

ஏன்,

தமிழ் தோன்றிய காலத்திலிருந்தே

இந்த பூமியை ஆட்கொன்டிருக்கும் அற்ப்புத பாறை

பிரபஞ்சத்தின் ப்ராணம்

ஞானத்தின் ஊற்று

ஞானிகளின் பிறப்பிடம்

சித்தர்கள் விளையாடும் மைதானம்

மகான்கள் உலாவூம் பூங்கா

அமைதியின் முத்திரை

தியானத்தின் மூலப்பொருள்

அகந்தையின் மறைவிடம்

ஆத்மாவின் கற்பப்பை

ஆணவத்தின் சமாதி

மௌனத்தால் செய்யப்பட்ட அச்சு

3000 அடி உயர்ந்து நிற்கும் தெய்வீக அற்புதம்

ஞானம் தேடி வருவோரின் மர்ம பொக்கிஷம்

இயற்கை அன்னை முதல் விதை விதைத்த வனம்

காலத்தின் பிறப்பிடம்

நேரத்தின் முன்னோடி

ஆசைகளை சுட்டுப்பொசுக்கும் மகா தீபம்

எண்ணங்களை வேறோடு அடித்துச் செல்லும் காட்டாற்று வெள்ளம்

சிவனுக்கு தந்தை

சக்திக்கு மாமன்

ப்ரபஞ்ச்தையே தோற்றுவிட்ட ஆரம்பம்

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றாக காட்சி தரும் மாயம்

அதுவே மலை

அண்ணாமலை

திருவண்ணாமலை…..

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com