யார் இந்தப் பெற்றோர்?

கவிதைத் தூறல்!
யார் இந்தப் பெற்றோர்?

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

- என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி

எதிர்பார்ப்பின்றி ஈன்றோர்

எதிர்ப்பவை பலத் தழுவி வளர்ப்போர்

நல்லொழுக்கத்தினை நயப்புடைப்போர்

நல்வினைகளால் நம்மை நயமாக்குவோர்

சொற்றோடரால் நம்மைக் கண்டிப்போர்

சொல்லாமல் அன்பைக் காண்பிப்போர்

வாழ்க்கைப் படிக்கட்டினை வடிவமைப்போர்

விளக்கேற்ற வருபவளின் விழிநீர் காப்போர்

துன்பக் கடலிலும் துடுப்பாகத் துணை இருப்போர்

தாங்கிச் செல்லத் துணை ஒன்றைத் தேர்வுச் செய்வோர்

முதிர்ந்து நின்று உன் வாழ்க்கையை ரசிப்போர்

முற்றிலும் உந்தன் வாழ்வினை வடிவமைப்போர்.

logo
Kalki Online
kalkionline.com