கொலு டிப்ஸ் -12

கொலு டிப்ஸ் -12
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

பொம்மைகள் ஏதாவது உடைந்து இருந்தாலும் விரிசல் விட்டிருந்தாலோ அந்த பொம்மைக்கு ஏற்ப தலைப்பாகம் உடைந்து இருந்தால் சிறிய தொப்பி அணிவிக்கலாம். கால் பாகம் உடைந்து இருந்தால், சிறிய ஸ்லோகன் ஒட்டலாம். நடுவே விரிசல் விட்டு இருந்தால் ஆண் அழகன், பெண் அழகி என்று பேப்பரில் எழுதி குறுக்கே போட்டு விரிசல் தெரியாமல் மறைக்கலாம்.

ழைய நோட்டு புத்தகங்களின் அட்டைகளை வீணாக்காமல் சின்ன சின்ன வீடுகளாகவும் கூரை வீடுகளாகவும் செய்து வர்ணம் கொடுத்து, கொலுவுக்கு ஒரு காலனி மாதிரி வரிசைப்படுத்தி வைத்தால் மிக அழகாக இருக்கும். இதனை வைத்து அழகான மரங்களையும் உருவாக்கி விடலாம்.

கொலு வைத்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்கும்போது அதை காட்டன் துணி அல்லது நியூஸ் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும். பாலித்தீன் கவர் அல்லது பாலிஸ்டர் புடவைகளில் சுற்றிவைத்தால் காற்றோட்டம் இல்லாமல் புழுக்கத்தால் பொம்மைகள் கலர் போய்விடும்.

ழைய தலைவாறும் சீப்புகள் உடைந்துவிட்டால், அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், கொலுவில் பார்க் வைக்கும்போது வீட்டில் அல்லது தோட்டத்தின் காம்பவுண்ட் போன்று சீப்பின் மேல்பகுதி மேலே தெரியும்படி வரிசையாக நிறுத்தி வைக்கலாம்.

பேப்பர் பிளேட்டின் நடுவே சிறிய ஓட்டை இட்டு, அதில் பேனாவைச் சொருகி பார்க்கில் பெரிய நிழற்குடை அமைத்து, அதன் கீழே  பொம்மைகளை வைத்தால் பார்க்க நன்றாக இருக்கும்.

பார்க் மலை போன்று அமைக்கும்போது சிறிய தகர டப்பாவை மணலில் புதைத்து, அதிலிருந்து சாம்பிராணி புகை வரும்படியாக வைத்தால். மலையில் இருந்து பனிப்புகை வருவது போன்று இருக்கும்.

வராத்திரிக்கு பத்து நாட்களுக்கு முன்பே ஐஸ்கிரீம் கப்புகளில் மண்ணுடன் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் கடுகு, வெந்தயம், கேழ்வரகு ஊற வைத்து, பிறகு கவனமாக சுற்றி தெளியுங்கள். எரு இருப்பதால் கம்பீரமாக வளரும். படிகளின் இரு ஓரங்களிலும் வைக்கலாம்.

சிறிய பிளாட்டில் இடமில்லை என்று பார்க் வைக்க முடியாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் மரக்கடையில் விற்கும் மரத்தூள் வாங்கி, பரப்பி அதில் சிறிதளவு பச்சை கலர்  இங்க் தெளித்து பரப்பிவைத்தால் அழகான புல்வெளி ரெடி.

ங்கோலி கோலம் போட்டவுடன் அதன் மீது கலர் ஜிகினா தூள்களை தூவிவிட்டால் கோலம் பல கலர்களில் பள பள பள என மின்னும்.

ரப்பாச்சி மற்றும் மர பொம்மைகளை வார்னிஷ் அடித்து வைத்தால் புத்தம் புது பொம்மைகள்போல் மின்னும்.

டிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு தெய்வாம்சம்  வந்துவிடும். அதனால் வைத்தபின் எடுப்பதோ இடம் மாற்றி வைப்பதோ கூடாது.

கொலுவில் மலைகளுக்கு விளக்கு அமைக்கும்போது மலைப் பாதையில் சிறிய கலர் மெழுகுவர்த்திகளில் திரியைச் சுற்றி மட்டும் மஞ்சள் ஜிகினா பேப்பரை சுற்றி வைத்து படிகளில் நிறுத்தினால் மலையை பார்க்க அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com