தலைமுறைக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்- மங்கையர் மலர்!

தலைமுறைக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்- மங்கையர் மலர்!

43- வது ஆண்டில் காலடி பதிக்கும் நம் மங்கையர் மலருக்கு  மூத்த வாசகியான என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் வளர  ஆசீர்வாதங்கள்.

90 வயதுடைய என்னால் எழுத முடியவில்லையாதலால் என் பெயரில் என் மகன் வீ. கணேஷ் மங்கையர் மலருக்கு துணுக்குகள், ரெசிப்பீஸ், புடவை பரிசுப் போட்டி என எல்லா களங்களிலும்  என் பங்களிப்பு இருக்குமாறு எழுதிப் போடுவான். படைப்பு வெளியானதும் எனக்கு படித்து காட்டுவான்.

இப்பவும் ஆன்லைனில் வரும் கதை, கட்டுரைகளை படித்து எனக்கு சொல்லுவான். என்னால் படிக்க முடியவில்லையென்றாலும், மங்கையர் மலர் மீது உள்ள அந்த ஆர்வத்தினால் எனது மகனை படிக்க சொல்லி கேட்பேன்.

போட்டியில் நிறைய பரிசுகள் பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். தகுதியான படைப்புகளை தேர்வு செய்து பரிசளிப்பதில் மங்கையர் மலர் என்றுமே  நம்பர் ஒன். இன்றும் பல இளையதலைமுறைகளின் பங்களிப்பு நம் மங்கையர் மலரில்  இருப்பதால்  மங்கையர் மலர் தலைமுறைக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இவளின் பணி இனிதே தொடர இந்த  மூத்த வாசகியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com