நானும் உங்களில் ஒருத்தி…

நானும் உங்களில் ஒருத்தி…

னிய வணக்கம். என் வாழ்வில் மங்கையர் மலர் முக்கிய பங்கு அளிக்கிறது. 40 வருடத்துக்குமேல் மங்கையர் மலர் வாசகி. எனது சித்தியும் மங்கையர் மலருக்கு எழுதி இருக்கிறார்கள். என்னுடைய கோலங்கள் நிறைய வந்து இருக்கிறது. இப்போதும் வந்து கொண்டு இருக்கின்றன. போன வருடம் பரிசாக கோலப் புத்தகங்கள் வந்தன. எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றால், ஒருமுறை மங்கையர் மலரும், இதயம் நல்லெண்ணெயும் சேர்ந்து நடத்திய சுற்றுலா. மதுரைக்கு 3 நாட்கள்அழைத்து செல்வதாக ஒரு ஏற்பாடு அதில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த மகளிரில் ஒரு டாக்டர் கூட இருந்தார்கள். அவர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சி. அவ்வளவு வேலையிலும் மங்கையர் மலர் அழைப்பின் பேரில் வந்து இருந்தார்கள்.

காலை 8 மணிக்கு ஹோட்டலில் தனியாக ரூம் கொடுத்து தங்க வைத்து சாப்பாடு கொடுத்தது முதல் ராஜேஸ்வரி ஹோட்டலில் கலந்துரையாடல் மற்றும் மதிய உணவு, அழகர்கோவில் சென்றோம், மறுநாள் தாஜ் ஹோட்டலில் இதயம் நல்லெண்ணெய் குடும்பத்தினருடன் சந்திப்பு மற்றும் அப்பவே சுடச் சுட காலையில் இருந்து மதியம்  3 வரை சாப்பாடு திருவிழாதான் அப்பவே பஃபே மற்றும் கலந்துரையாடல்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எங்கள் மங்கையர் மலர் குழுவுக்கு என்று தனியாக ஏற்பாடு செய்து சென்றோம்.  மீனாட்சி அம்மனின் நல்ல தரிசனம் கிடைத்தது. எனக்கும் 62 வயது ஆனாலும் அம்மா வீடு மாதிரி மங்கையர் மலரின் தொடர்பு இருந்து கொண்டு இருக்கிறது. அம்மா வீட்டு சீதனம் போல் மங்கையர் மலர் குடும்பத்தில் இருந்து பரிசு வந்து கொண்டே இருக்கிறது.

ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள் தந்த மங்கையர் மலருக்கு மிக்க நன்றி. முன்பெல்லாம். மங்கையர் மலர் பக்கங்கள் அதிகம், உயரம் அதிகம். எப்ப படித்தாலும் புதிதாக படித்த உணர்வு. அதுபோல் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி. எங்கள் வயதுக்கு புத்தகம் என்றால் வசதி. போனில் எடுத்து வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் சகோதரிகள் லிங்க் அனுப்புவதால் வசதியாக இருக்கிறது. போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. நானும் உங்களில் ஒருத்தி என்பதில் பெரிய மகிழ்ச்சி, நன்றி.      

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com