தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும்  மங்கையர் மலர்.

தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும் மங்கையர் மலர்.

43 வருடங்களாக தொடர்ந்து மங்கையர் மலருடன் பயணித்து வருவது மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. தொடர்ந்து  எழுதுவதில் ஆர்வம் சற்று கூட குறையைல்லை. அதே ஆர்வம் இன்றளவும் தொடர்வது நான் செய்த பெரும் பாக்கியம் என்று எண்ணுகிறேன். தினம் தினம் பூக்கும் மலராக விளங்கும்  மங்கையர் மலரின், 92 வயது வரையில் வாழ்ந்த என் மாமியார் தீவிர வாசகியாக இருந்தார் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பல ஆண்டுகளாக வாசகிகளைக்  கட்டிப் போட்டிருக்கும் வசீகரம் இம்மலருக்கே உரிய தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. பெங்களூரில் பல வருடங்கள் முன்பு நடிகை மனோரமா தலைமையில்  நடந்த மங்கையர் மலர் வாசகர்கள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு நிறைய பரிசு பெற்றது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. மங்கையர் மலர் நூறாண்டு காலம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com