மேன்மைக்கு வழிகாட்டும் மங்கையர் மலர்.

மேன்மைக்கு வழிகாட்டும் மங்கையர் மலர்.

ங்கையர் மலருடனான பந்தம் தலைமுறை தாண்டியும் எங்களை வாழவைத்து வழிநடத்துகிறது என்றால் அது மிகையாகாது. எல்லாமுமாய் எங்கள் வாழ்வில் பல ரோல்கள் ஏற்று எங்களை உயிர்ப்புடன்  வைத்திருக்கும் மலரின் மணம், எங்கள் சுவாசமாய்  என்றும் எங்களுடனே பயணிக்கிறது மங்கையர் மலர்.

2013 மருத்துவ ஸ்பெஷல் இதழாக மலர் வந்தது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் பல மருத்துவர்களின் ஆலோசனையும், மருத்துவ உலகின் முன்னேற்றத்தையும் படித்து பிரமித்தோம். அதில் குறிப்பிட்டிருந்தபடி உடல் முழு பரிசோதனை, மருத்துவக் காப்பீடு என  பல முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொண்டதோடு நாங்களும் முழு பரிசோதனை செய்து கொண்டோம். மருத்துவக் காப்பீடும் எங்கள் குடும்பம் முழுமைக்கும் எடுத்துக் கொண்டோம்.

இன்று நான் நலமாக இருப்பதற்கு அன்று மலரில் படித்தபடி காப்பீடு எடுத்ததும், சரியான சமயத்தில் உடல் முழுபரிசோதனை செய்து கொண்டதும்தான் காரணம்.

வாசகியரின் குடும்ப உறுப்பினராக, உறவாக, உயிராக மலர் சேவை ஆற்றுகிறது என்றால் அதில் ஐயமில்லை. மாற்றங்கள் பல கண்டாலும் எங்கள், மனங்களில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து எங்கள் மேன்மைக்கு வழிகாட்டுகிறது.

வாழ்க மலரின் பணி, தேவை அதன் துணை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com