மங்கையர் மலர் என் வாழ்வில் பூத்த புதுமலர். என் எழுத்துலகின் வழிகாட்டி எனலாம். என் முதல் கட்டுரையே பரிசுக்குரியதாக பெருமையைப் பெற்றதை என்னென்றுரைப்பது....!
அன்று, பிரசித்திப் பெற்ற தங்க கடற்கரையில் மங்கையர் மலர் மேடையில் கௌரவிக்கப்பட்டேன்...!
சமீபத்தில் நான் அங்கு சென்றபோது என் நினைவில் மங்கையர் மலரின் நினைவலைகள் முன்னின்று ஆடியதை என்னவென்று சொல்ல...!
மங்கையர் மலர் கொடுத்த ஊக்கத்தில் தொடர்ந்து எழுதலானேன். பல கட்டுரைகள் பிரசுரமானதில், நடுவர் குழுவின் அங்கமானதில் ஆகா....என் உள்ளம் பெருமிதத்தில் பொங்கி வழிந்தது.
கவிதை, கட்டுரைகள், துணுக்குகள் என எழுதியதில் .. .. உறவுகள் மட்டுமின்றி பலரின் அறிமுகம் புதிதாக கிடைத்ததில் நட்பு வட்டமும் பெருகியதே...!
வாழ்வில், தன்னம்பிக்கை தைரியத்தை மிளிரச் செய்து என் மறுபக்கத்தைக் காட்டியது மங்கையர் மலரே.
இப்போது சொல்லுங்கள் எனக்கும் மங்கையர் மலருக்கும் உள்ள உறவு நெருக்கமானதுதானே...?